தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு என்றால் மிகையாகாது. யோகி பாபு இருந்தால் மினிமம் கேரண்டி என்று டிஸ்ட்ரிபியூட்டர்கள் வரையறை வைத்திருப்பதே அவருடைய இருப்பை அதன் அவசியத்தை உணர்த்துகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரப்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான். மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும், காமெடி இல்லாத நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கர்ணன் படத்தில் வருவது போன்ற கதாப்பாத்திரங்களும் அவ்வபோது செய்து நடிகராகவும் தன்னை நிரூபிக்கிறார் யோகி பாபு. கடைசியாக இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது முருகேஷ் பாபு எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்க உள்ளாராம். அந்த படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். காதல் கதை என்றாலும், யோகி பாபுவின் அக்மார்க் காமெடி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான லட்சுமி மேனன், இதையடுத்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், என ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். வேதாளம் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த லக்ஷ்மி மேனனுக்கு அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெரிதாக குறைந்தது. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜெயம் ரவியின் மிருதன், விஜய்சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்கள் சொதப்பவே அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி இருந்தார்.
2016க்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் லக்ஷ்மி மேனன் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு மீண்டும் கும்கி ஜோடியான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது. ஆனால், ஹிட் கொடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதையடுத்து இந்தாண்டு வெளியான புலிக்குத்தி பாண்டி படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தற்போது மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். யோகி பாபுவுக்கு, அவருடைய 2022 ரிலீஸ்களில் டாப் இரண்டு நடிகர்களின் படமான வலிமை, பீஸ்ட் என இரண்டும் உள்ளது, சிவகார்த்திகேயனின் அயலான், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, பின்னர் அவர் நாயகனாக நடிக்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பொம்மை நாயகி, காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன.