பெங்களூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், தனது மகளான செளமியா உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக கிடப்பதாகவும், மகள் உங்களை பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செளமியாவுக்காக பிரார்த்திப்பதாக கூறி ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய ரஜினி, “ஹலோ செளமியா, எப்படி இருக்க.. உனக்கு ஒன்னும் ஆகாது. சாரி கண்ணா.. என்னால உன்ன வந்து பாக்க முடியாது. இப்ப கொரோனா இருக்குறதனால, எனக்கும் உடம்பு சரியில்ல.. இல்லனா உன்ன வந்து பார்த்துருப்பேன் கண்ணா.. தைரியமா இரு.. உனக்காக நான் பிரே பண்றேன். சிரிக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய்.. எல்லா சரியாகிவிடும்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி, பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்னர், மீண்டும் ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்ற ரஜினி பின்னர் வீடு திரும்பினார்.
அண்மையில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தொடர்ந்து திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வந்து கொண்டுதான் இருந்தனர். இதனையடுத்து ரஜினி அண்ணாத்த படத்தின் இயக்குநர் சிவாவை சந்தித்து தங்க செயினை பரிசளித்தார்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்