மேலும் அறிய
Advertisement
Crime: அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டமா ? - 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்
sriperumbudur : ஶ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் கைது - தப்பி ஓடிய 6 பேருக்கு போலீஸ் வலை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஆறு பேரை வலை வீசி தேடி வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
5 பேரை போலீசார் மடக்கி பிடித்த போலீஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே கரசங்கால் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் மணிமங்கலம் போலீசார் கரசங்கால் வனப்பகுதியை சுற்றிவளைத்தனர். நீண்ட நேரமாக கண்காணித்து தேடி வந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளே இருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்த போது 6 பேர் தப்பி ஓடினர். அப்போது பிடிபட்டவர்களிடமிருந்து, 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படித்தபடும் வெடி பொருட்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம்
இதை அடுத்து அவர்களிடமிருந்த நாட்டு வெடிகுண்டு, அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மணிமங்கலம் பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, அதற்காக ஆயுத்தமாக நாட்டு வெடி குண்டுகளை தயார் செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய புத்தேரி பகுதியைச் சேர்ந்த சூர்யா (26). திருக்காச்சூர் பகுதியைச் சேர்ந்த அழகேசன் (27), சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (29) பழைய நல்லூரை சேர்த்த நாகராஜ் (21), மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (30) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பாஜக பட்டியலின பிரிவு மாநில பொருளாளருமான, பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது, இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வளர்ந்து வரும் ரௌடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion