மேலும் அறிய

பாலியல் வன்கொடுமை வழக்கில் தப்பியோட முயற்சித்த குற்றவாளிகள்..! சுட்டுப்பிடித்த போலீஸ் ..! பின்னணி என்ன ?

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வல்லம், வடகால் ஆகிய பகுதிகளில் 5 தொழில் பூங்காக்கள் உள்ளன. இந்த தொழில் பூங்காக்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கான பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 11 தேதி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வேலை பார்த்து வந்த பின் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தப்பியோட முயற்சித்த குற்றவாளிகள்..! சுட்டுப்பிடித்த போலீஸ் ..! பின்னணி என்ன ?
"கத்தியை காட்டி மிரட்டி"
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்  கடந்த டிசம்பர் மாதம் 11 - ஆம் தேதி  தனது ஆண் நண்பருடன் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அவரைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர், காக்கி பேண்ட் அணிந்து கொண்டு தங்களை போலீசார் போல், காட்டிக் கொண்டு விசாரிக்க வேண்டும் என அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர் . ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் செல்லும் சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு , அந்த பெண்ணை அழைத்துச் சென்று இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தப்பியோட முயற்சித்த குற்றவாளிகள்..! சுட்டுப்பிடித்த போலீஸ் ..! பின்னணி என்ன ?
" காவலன் ஆப் "
 
இது குறித்து அந்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகரில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . 363,376,376D, 506 (ii),‌ ஆகிய பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது.
 
"தனிப்படை போலீசார்"
 
குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் (31) மற்றும் பிரகாஷ் (31) என்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 5 நாட்களுக்கும் முன்பு கூட ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருவர் சுற்றி திரிந்த பொழுது, இதுவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்தபோது,   தப்பி சென்றனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்ய வேண்டும் என போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தப்பியோட முயற்சித்த குற்றவாளிகள்..! சுட்டுப்பிடித்த போலீஸ் ..! பின்னணி என்ன ?
மேலும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே,  திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் மட்டுமின்றி திருவள்ளூர் , அரக்கோணம், செய்யாறு, உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றச் செயலில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரிய வந்தது. காவலர்கள் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக, கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதும் தெரியவந்தது. அதே போல் இருவரும் சேர்ந்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் பெரிய நகர் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
 
" சுட்டுப் பிடித்த போலீஸ் "
 
இந்த நிலையில் தனிப்படை போலீசார், இருவரையும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதை தகவலை அறிந்து சென்ற பொழுது , தப்பியோட முயன்றபோது இருவரையும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர். இதில் நாகராஜுக்கு துப்பாக்கி பாய்ந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடன் இருந்த பிரகாஷ் தப்பிக்கும் பொழுது காலில் முடிவு ஏற்பட்டுள்ளது ‌.
 
பாலியல் வன்கொடுமை வழக்கில் தப்பியோட முயற்சித்த குற்றவாளிகள்..! சுட்டுப்பிடித்த போலீஸ் ..! பின்னணி என்ன ?
பாதிக்கப்பட்ட இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, வாக்கிடாக்கி, லத்தி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நெம்பர் பிளேட் கட்டர், மிளகாய்பொடி, சாவி, ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு, கையுறை மற்றும் முகமுடி ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget