மேலும் அறிய
Advertisement
Crime: வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி; மகன் செய்த சேட்டையால் மாட்டிக் கொண்ட தந்தை
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பு, சிவகாஞ்சி போலீசார் நடவடிக்கை.
தண்ணீர் கேனில் மண்ணை நிரப்பி ஒரே ஒரு கஞ்சா செடி
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கண்ணுசாமி வீட்டில் வீணாகிப் போன தண்ணீர் கேனில் மண்ணை நிரப்பி ஒரே ஒரு கஞ்சா செடி வைத்து வளர்த்து வந்துள்ளார். கண்ணுசாமி கஞ்சா செடி வளர்ப்பது குறித்து அரசல் புரசலாக வெளியே தெரியவர இதுகுறித்து சிவ காஞ்சி போலீஸாருக்கும் தகவல் தெரிந்தது.
சிறையில் அடைப்பு
தகவல் அறிந்த சிவ காஞ்சி போலீசார் பல்லவர் மேட்டில் உள்ள கண்ணுசாமி வீட்டிற்கு சென்று விசாரணை செய்த போது அவரது குடும்பத்தினர் புளிச்சை கீரை செடி என நினைத்து வளர்த்து வருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த கார் ஓட்டுநர் கண்ணுசாமியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.
அப்பாவி மனைவி
முன்னதாக இதுகுறித்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பர்களுடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்தது காஞ்சிபுரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டில் சென்று விசாரித்த பொழுது அவர் மனைவி இருந்துள்ளார். அப்பொழுது இது கஞ்சா செடி என்று தெரியாத, அப்பாவி மனைவி புளிச்சி கீரி செடி என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மனைவியிடம் இது கஞ்சா செடி என்றும் இதை வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்றும் புரிய வைத்தனர். மனைவியே ஏமாற்றிய வந்த கணவன் தனது மகனின் செயலால் சிக்கி இருக்கும் சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion