மேலும் அறிய
Advertisement
ஃப்ளாட் போடப்பட்ட அரசு நிலங்கள்.. சோதனையில் சிக்கிய ஆவணங்கள்.. காஞ்சியில் ஷாக் சம்பவம்!
அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து சுமார் 50 கோடி மோசடியில் ஈடுபட்ட இரண்டு சார் பதிவாளர்கள் என மூன்று பேரை காஞ்சிபுரம் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அண்ணா நகர் மற்றும் சைதாப்பேட்டையில் அலுவலகம் அமைத்து 15க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது விஜிபி குழுமம். இதில் மிக முக்கியமாக நிலங்களை விலை கொடுத்து வாங்கி அவற்றை வீட்டுமனை பட்டாக்களாக பிரித்து அரசு அனுமதி பெற்று விற்பனை செய்வதை மிக முக்கிய வியாபாரமாக செய்து வருகின்றனர் .
இக்குழுமத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில் நெமிலி, வடகால் மற்றும் ஆயக்குளத்தூர் பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் கிரையம் பெற்று அதில் விஜிபியின் பல பெயர்களைக் கொண்டு வீட்டு மனைகள் பிரிவுகள் உருவாக்கி அதை டிடிசிபி அப்ரூவல் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிடிசிபி அப்ரூவல் பெறுவதற்கு வீட்டுமனை உருவாக்கப்பட்ட பகுதிகளில் பொது உபயோகத்திற்கு, அந்த கிராம ஊராட்சிக்கு குறிப்பிட்ட இடத்தினை தானமாக கிரையம் செய்து அளிக்க வேண்டும்.
அவ்வகையில் ஆயக்குளத்தூர் பகுதியில் ஊராட்சிக்கு அளிக்கப்பட்ட சுமார் 28 ஏக்கர் நிலத்தினை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பெயரில் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் நெமிலி கிராமத்தில் போடப்பட்ட வீட்டுமனை பிரிவுகளுக்காக பொது உபயோகத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தானமாக அரசிற்கு பதியப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலங்களை வி.ஜி.எஸ் அமறதாஸ் ராஜேஷ் சார் பதிவாளர் கூட்டு சேர்ந்து தானமாக வழங்கப்பட்ட இடங்களை ரத்து செய்து அதை விற்பனை செய்துள்ளனர். இதே போல் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் , பால் நல்லூர் , வல்லம் ஆகிய பகுதிகளில் தொழில் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களையும் இதற்காக அரசிடம் பெற்று பணம் பெற்றுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிப்பட்டு சார் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் தான நிலங்களை ரத்து செய்து விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுபோன்று சட்டவிரோதமாக தானம் அளித்த நிலங்களை ரத்து செய்த பள்ளிப்பட்டு சார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜதுரை , காஞ்சிபுரம் எண் 2 இல் இணை சார்பதிவாளராக பணிபுரிந்த சுரேஷ், ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளராக பணியில் இருந்த ரவி ஆகிய மூவர் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் போலி கையொப்பத்துடன் அளித்து தடையில்லா சான்று கோரியதிற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் வி ஜி எஸ் அமலதாஸ் ராஜேஷ் சார் பதிவாளர்கள் சுரேஷ் மற்றும் ரவி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்பட்ட விஜிஎஸ் அமறதாஸ் என்பவர் பிரபல விஜிபி குழுமத்தினை சேர்ந்த வி.ஜி.சந்தோஷ் என்பவரின் மகன் ஆவார். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வீட்டு மனை பிரிவு போடப்பட்டு தற்போது பல்வேறு சாலை, புதிய தொழிற்சாலை பணிகளுக்காக அரசு கையகப்படுத்தும் போது அதிகளவில் பணம் கிடைக்கும் என மோசடி செய்து விற்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது..
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion