மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?

illicit liquor Treatment : " அதற்கு சில மாற்று மருந்துகளும் இருக்கின்றன. மாற்று மருந்துகள் கொடுக்கப்படும், மருந்துகள் 100% பயன் தராது "

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்து 127 பேர் இதுவரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் பாதிப்பு...

இவற்றில் இதுவரை சிகிச்சை பலனின்றி 37 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன.  இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது சிபிசிஐடி போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ள திட்டம் திட்டி உள்ளனர்.

தலைநகரில் கிடைத்த கள்ளச்சாராயம் 

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கிடைத்த கள்ளச்சாராயத்தால் இந்த உயிரிழப்பு நடைபெற்று இருப்பது, கள்ளச்சாராயத்தை கண்காணிப்பவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய இரண்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போக மேலும் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மெத்தனால் என்ற அரக்கன்...

தற்பொழுது உயிரிழப்பு ஏற்படுவதற்கு, கள்ளச்சாராயணத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது. மெத்தனாலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, கள்ளச்சாராயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் என்பது பொதுவாக அவற்றைக் காய்ச்சி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், இது போன்ற கலாச்சாராயத்தில் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும். மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் கலந்து விற்கப்படும் கள்ளச்சாராயம், சிறிய தப்பு நடந்தால் கூட அது விஷமாக மாறிவிடும் .

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி பாதிக்கப்படுபவர்களை குறித்து நாம் பார்க்க வேண்டியவை, எவ்வளவு சாராயம் குடிக்கிறார்கள், அவர்கள் குடிக்கும் விஷ சாராயத்தில் எவ்வளவு மெத்தனால் உள்ளது. பாதிப்பு அடைந்தவுடன் எவ்வளவு நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். 

விஷம் சாராயம் குடித்து 30 நிமிடங்களில் மருத்துவமனை வந்து சேர்ந்தால் வயிற்றைக் கழுவி, காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதற்கு மேல் நேரம் செல்ல செல்ல, உடல் மெத்தனாலை புரிந்து கொள்ள துவக்கும் . கண் பாதிப்பு ஏற்படும், வயிற்று பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பதிப்பு, தொடர்ந்து அவர்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரம்பத்தில் பாதிக்கும் உறுப்புகள் கண் மற்றும் சிறுநீரகம்தான். 

காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் 

முதலில் உடலில் இருக்கும் மெத்தனாலை வெளியில் எடுப்பார்கள். அதற்கு சில மாற்று மருந்துகளும் இருக்கின்றன. மாற்று மருந்துகள் கொடுக்கப்படும், மருந்துகள் 100% பயன் தராது. இதனால்தான் எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பது முக்கியமாகிறது. ரத்தத்தில் கலந்து விட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய கிடையாது. அந்த இடத்தில் தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டால் தான் பிரச்சனைகளை, தீர்க்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget