![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: டெல்லி,கொல்கத்தா,பாட்னா அழைத்து சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப நபர் !
புகாருக்கு உள்ளான நபர் கடந்த மாதம் 28ஆம் தேதி இப்பெண்ணை வெளியே அழைத்து சென்றுள்ளார்.
![Crime: டெல்லி,கொல்கத்தா,பாட்னா அழைத்து சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப நபர் ! Jharkhand Man repeatedly physically abused sister in law and threatens to kill her Crime: டெல்லி,கொல்கத்தா,பாட்னா அழைத்து சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குடும்ப நபர் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/15/cb085e0d0e29b40d97e4c7782e893854_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெண் ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது. பெண் ஒருவரை சொந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் பித்தோரியா பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அதைப் பயன்படுத்திய அந்த நபர் கடந்த மாதம் 28ஆம் தேதி இப்பெண்ணை வெளியே அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து இருவரும் பாட்னா சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் ரயில் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் ஒரு ஓட்டலில் அரை எடுத்து அந்தப் பெண்ணை இரண்டு நாட்களாக அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவரை கொல்கத்தாவிற்கு அழைத்து சென்று அங்கும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
அதன்பின்னர் இருவரும் மீண்டும் ஜார்க்கண்ட் வந்துள்ளனர். அப்போது ரயில் நிலையத்தில் வைத்து நடந்த விஷயம் அனைத்தையும் வெளியே கூறினால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக அப்பெண்ணை அந்த நபர் மிரட்டியுள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் நடந்ததை கூறி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அந்த நபரை தேடி வருகின்றனர். பெண் ஒருவரை அவருடைய குடும்ப நபர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: டிரம்ஸ் செட்டில் எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்: வீடியோ வைரல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)