மேலும் அறிய

9 வகுப்பு சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடூரம் : ஜார்க்கண்ட்டில் பயங்கரம்..

வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவில்லாமல் கடந்துகொண்டிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் மூன்று பேரால் கடத்தப்பட்டு மூன்று மாதங்களாக  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்ததாக தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் விஷ்ணுகுமார், மந்தோஷ் மற்றும் மனோஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று கூறினார். சிறுமி காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு, குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஏப்ரல் 20 அன்று காணாமல் போனவர் குறித்து புகார் அளித்ததாக பிரபல செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகாரை போலீசார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மகள் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்குமாறும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


9 வகுப்பு சிறுமியை மூன்று மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடூரம் : ஜார்க்கண்ட்டில் பயங்கரம்..

அந்தப் பெண் கடத்திச் செல்லப்பட்ட ஆட்டோ


வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. போலீசார் விரைவில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவார்கள்” என்று நகர டிஎஸ்பி  குல்தீப் குமார் கூறியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்ய முயற்சித்து வருவதாக டிஎஸ்பி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பியபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட மூவரால் சிறுமி கடத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஆட்டோரிக்ஷாவில் இழுத்துச் சென்று முகத்தில் துணியைக் கட்டியுள்ளனர்.

சிறுமி தெலிதிஹ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை ஒரு அறையில் அடைத்துவிட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் வாயில் துணியைக் கட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 19-ம் தேதி பூட்டை உடைத்து தப்பிச் சென்ற சிறுமியை அக்கம்பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பின்னர், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். கடந்த ஜூலை 24 அன்று, சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் பொகாரோ மகளிர் காவல் நிலையத்தை அடைந்து இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். அந்தப் பெண் தற்போது தனது பெற்றோருடன் பாதுகாப்பாக உள்ளார்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget