மேலும் அறிய

தண்டவாளத்தில் இரும்பு துண்டு: பல்லவன் எக்ஸ்பிரஸ் பழுது - ரீல்ஸ் எடுத்த 5 வாலிபர்கள் கைது!

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்கள் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரயில் இன்ஜினில் தீடீர் சத்தம்

சென்னை – காரைக்குடி இடையே தினசரி இயங்கி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 9ம் தேதி மதியம், சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி அடுத்த பேரணி பகுதியில் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, ரயில் இன்ஜின் முன் சக்கரத்தில் உடைப்பு இருந்ததால், உடனடியாக விழுப்புரத்திலிருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து, அதில் இணைத்து, 2 மணி நேரம் தாமதமாக ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.

தண்டவாளத்திற்கும், இன்ஜினுக்கும் இடையே சத்தம்!

இந்நிலையில், அந்த ரயில் ஒலக்கூர் – திண்டிவனம் பகுதியில் வந்தபோது, திடீரென தண்டவாளத்திற்கும், இன்ஜினுக்கும் இடையே சத்தம் ஏற்பட்டதாக, ரயில் டிரைவர் அளித்த தகவலின் பேரில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் குழு சோதனை நடத்தினர். அப்போது, ஒலக்கூர் அருகே மேல்பேட்டை பகுதியில் விஷமிகள் சிலர், இரும்பு துண்டை தண்டவாளத்தில் வைத்ததால், தண்டவாளமும், இன்ஜின் சக்கரமும் சேதமடைந்திருந்ததை கண்டறிந்து, அதனை சீர்படுத்தினர்.

செல்போனில் படம் பிடித்து ரீல்ஸ்

இது குறித்த புகாரின் பேரில், திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் குழுவினர், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியபோது, திண்டிவனம் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், மதுபோதையில், விளையாட்டாக ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்தும், அதனை செல்போனில் படம் பிடித்து ரீல்ஸ் போட்டு விளையாடியதும், அந்த இரும்பு துண்டு தான், பல்லவன் ரயில் இன்ஜின் சக்கரத்தையும், தண்டவாளத்தையும் சேதப்படுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, ரயில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஆபத்தை உணராமல் செயல்பட்டதாக, பீகாரை சேர்ந்த ஜமுனாராம் மகன் அபிஷேக்குமார் (25) சோட்டேலால் மகன் ஆகாஷ்குமார் (21), விஜய்ராம் மகன் பாபுலால் (20), ராஜிராம் மகன் தீபக்குமார் (23), துபானிராம் மகன் ராஜாராம் (20) ஆகியோர் மீது திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுரேஷன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து, நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட போலீசாரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி..! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்ட போலீசாரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி..! என்ன தெரியுமா..?
ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்... பின்னணியில் நடந்த கொடூரம் - கொலையாளியை காட்டிக்கொடுத்த முக்கியத் தடயம் எது?
ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்... பின்னணியில் நடந்த கொடூரம் - கொலையாளியை காட்டிக்கொடுத்த முக்கியத் தடயம் எது?
சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Embed widget