மேலும் அறிய
Advertisement
உழைப்பாளர் தினத்தன்று நடந்த சோகம்.. சென்னை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..
திருவள்ளூர் அருகே பேரூராட்சியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் இருவர் தனியார் பள்ளியின் கழிவறையை தூய்மை செய்யும்போது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே பேரூராட்சியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் இருவர் தனியார் பள்ளியின் கழிவறையை தூய்மை செய்யும்போது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய நேதாஜி நகர் 18-வது வார்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியான , இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் என்ற பிற்பகல் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில், பணிபுரிந்து வரும் நிரந்தர துப்புரவு பணியாளரான பட்டலால் பகதூர் தெருவில் வசிக்கும் கோவிந்தன் (45) மற்றும் தற்காலிக பணியாளரான சுப்புராயலு (45) கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் , இரு உடல்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வந்த நிலையில் தகவல் அறிந்து ஆவடி காவல்துறை ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் சங்கடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இருவர் உயிரிழந்த சம்பவம் காரணமான பள்ளி தாளாளரான சிமியோன் விக்டர் என்பவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து தற்போது மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் போது மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், தனது பள்ளிக்கு வந்து துப்புரவு பணி மேற்கொண்டதாக கூறுயுள்ளார். மேலும் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகித்தனர் இன்று விடுமுறை நாள் என்பதாலும், இது தொழிலாளர் தினம் என்பதாலும், எந்த ஒரு துப்புரவு பணியாளரும் தாங்கள் பணிக்கு நியமிக்கவில்லை என கூறுகின்றனர். உழைப்பாளர் தினமான இன்று இரண்டு தொழிலாளர்கள் மரணமடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion