மேலும் அறிய
செங்கல்பட்டில் போலி மதுவால் கொடூரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு - 3 போலீஸ் சஸ்பெண்ட்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வசந்தா--சின்னதம்பி
கள்ளச் சந்தையில் வாங்கிய மது
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சின்னதம்பி ( வயது 30 ). இவருடைய மனைவி அஞ்சலி ( வயது 22) . சின்னத்தம்பி மற்றும் அஞ்சலி தம்பதி இருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்களுடன் சின்னத்தம்பியின் மாமியார் வசந்தா வசித்து வருகிறார் ( வயது 42). இந்த நிலையில் நேற்று முன்தினம் மூவரும் இணைந்து மது அருந்தி உள்ளனர். இந்த நிலையில் மது அருந்திய சின்னத்தம்பி மற்றும் அவருடைய மாமியார் வசந்தா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய அஞ்சலியை, மீட்ட அக்கம் பக்கத்தினர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அஞ்சலிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரைக் குடித்த கலப்படம் மது
இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் ( 65) , அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் என்று உயிரிழந்தனர். உயிரிழந்த வென்னியப்பன் மற்றும் சந்திரா ஆகியோர், ஏற்கனவே உயிரிழந்த சின்ன தம்பி மற்றும் வசந்தா ஆகியோருக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மது குறித்து மர்மமான முறையில் உயிரிழந்தது, குறித்து தகவல் கிடைத்த சித்தாமூர் போலீசார் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளச் சந்தையில் , " மது வாங்கி குடித்த மதுவின் காரணமாக, இந்த உயிரிழப்பு நடந்திருக்கலாம் என கண்டுபிடித்தனர்.

மது விற்றவருக்கும் பாதிப்பு
இதனையொடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில், அமாவாசை என்பவர் கள்ளச்சந்தையில், மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்பொழுது அமாவாசை தானும் அந்த மதுவை அருந்தியதாக காவல்துறையிடம் கூறிய காரணத்தினால், அவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் . மேலும் இந்த வழக்கில் வேலு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இரண்டு இடத்திற்கும் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் யார் யார் அமாவாசையிடம், மது வாங்கி குடித்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு யாராவது போலி மதுவை அருந்தி இருந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் .
மூவர் சஸ்பெண்ட்
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்த பொழுது தெரிவித்ததாவது, " கள்ளச் சந்தியில் விற்கப்பட்ட மதுவில் கலப்படம் இருந்தது தெரிய வந்துள்ளது, எந்த மாதிரியான செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர், மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் போதை அமலாவுக்கு பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion