மேலும் அறிய
Advertisement
Crime : ”கடன் கொடுக்கலன்னு அவமானப்படுத்துனாங்க..” : மூதாட்டியை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்
செங்கல்பட்டு அருகே மூதாட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே, ஆப்பூர் சேந்தமங்கலம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கழுத்து மற்றும் காது அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார பகுதிகளில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, யாராவது காணாமல் போனார்களா என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரித்ததில் தாம்பரம் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (வயது 70) என்பவர் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு பக்கத்து தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பும் போது, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் வயது ( 52) என்பவர் மூதாட்டியை வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்றவர் வீட்டில் விடவில்லை.
இது குறித்து இன்று காவல்துறை விசாரித்து வந்த நிலையில், காணாமல் போன லட்சுமி தான் பாலூர் அருகே உயிரிழந்து இருப்பது காவல்துறையினர் உறுதி செய்தனர். மூதாட்டி குடும்பத்தினரும் மூதாட்டியை அடையாளம் காட்டினர். இதனை அடுத்து இதுகுறித்து பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
இது குறித்து கைதான ஆறுமுகம் காவல்துறையினர் கொடுத்த வாக்குமூலத்தில், நான் மூதாட்டியிடம் சுமார் 80,000 ரூபாய் கடன் பெற்று உள்ளேன். 80 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டு மூதாட்டி பல நாட்களாக என்னை அவமானப்படுத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மூதாட்டி எனது வீட்டு அருகே வந்து, பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மூதாட்டியை வாகனத்தில் அழைத்து சென்று கொண்டு மிரட்டலாம் என சென்றேன்.
ஆனாலும் எனக்கு கோபம் அடங்காத காரணத்தினால் மூதாட்டியை கொலை செய்ய திட்டமிட்டு ஆட்டோவில் மூதாட்டியை ஏற்றி ஆப்பூர் காட்டுப்பகுதி அருகே கொண்டு சென்று கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர். ஆட்டோ ஓட்டுநரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion