ராமநாதபுரம்: காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. விசாரித்த காவலர்களுக்கு அரிவாள்வெட்டு
சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கடற்கரையில் மூன்று பேர் இளம் காதல் ஜோடியை மிரட்டி நகைகளை பறித்து பாலியல் தொல்லை செய்ததாக புகார் வந்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் மற்றும் நகை பறிப்பு குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது இரண்டு போலீசாரையும் அரிவாளைக்கொண்டு வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற இரண்டு குற்றவாளிகளும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறி, கீழே விழுந்ததில் இரண்டு கால் முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மூக்கையூர் கடற்கரையில் மூன்று பேர் இளம் காதல் ஜோடியை மிரட்டி நகைகளை பறித்து பாலியல் தொல்லை செய்ததாக வந்த புகாரில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரை குற்றவாளிகள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @SRajaJourno pic.twitter.com/LKKxuDMxNa
— Arunchinna (@iamarunchinna) March 26, 2022
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரியில் பயின்று வரும் ஒரு பெண்ணும் அவருடைய ஆண் நண்பர் ஒருவரும் கடந்த இருபத்தி மூன்றாம் தேதி சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர். மூக்கையூரில் மீன்பிடித் துறைமுகம் இருந்துவரும் நிலையில் அந்தப் பகுதியில் விடுமுறை நாட்களில் பொழுதை கழிக்க உள்ளூர் பகுதி மக்கள் அங்கு சென்று வருவது வழக்கம். இந்த அடிப்படையில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த இந்த காதல் ஜோடியும் அங்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் தனிமையில் இருப்பதை நோட்டமிட்ட பத்மாஸ்வரன், அஜித், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரும் ஆண் நன்பரை கட்டிப்போட்டு விட்டு அந்த பெண் அணிந்திருந்த செயின், தோடு உள்ளிட்ட நகையையும் பறித்துக்கொண்டு, கத்திமுனையில் அந்தப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு காவல் கண்காணிப்பாளரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட போலீசார் தகவல் கொடுத்ததை அடுத்து அந்த மூன்று குற்றவாளிகளையும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போலீசார் விசாரணை செய்து தேடி வந்த நிலையில், அதில் ஒருவர் கமுதி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மாஸ்வரன், மற்றொருவர் விருதுநகர் மாவட்டம் நத்த குலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், அஜீத் ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் அவர்களை தேடிச் சென்றபோது கமுதி அருகே குண்டு குளம் கிராமத்தின் அருகே பதுங்கியிருந்த பத்மாஸ்வரன், தினேஷ் குமார் 2 பேரை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் காவலர் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனம் கவிழ்ந்து இரண்டு பேருக்கும் கால் உடைந்தது. இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெட்டுப்பட்ட போலீசார் இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் போலீசார் என இரண்டு மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு