புதுச்சேரியில் மனைவி, குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை - காரணம் என்ன..?
கடன் சுமை காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
![புதுச்சேரியில் மனைவி, குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை - காரணம் என்ன..? Husband commits suicide after killing wife and children Atrocity in Puducherry due to debt burden புதுச்சேரியில் மனைவி, குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை - காரணம் என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/8983b29f07179110b35f05e9908416db1657186450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடன் சுமை காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் தியாகராஜன். இவருக்கு வயது 38. ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், குடும்பத்துடன் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே கடன் சுமை காரணமாக ஆட்டோ ஓட்டவில்லை.
மேலும் கடன் காரணமாக அவர் ஒட்டிக்கொண்டிருந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு கடந்த இருபது மாதங்களாக எலக்ட்ரிசன் கூலி தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் அவரது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் அனைவரையும் அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். தகவலை கேட்ட உறவினர்கள் உடனடியாக தியாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது தியாகராஜன், அவரது மனைவி பச்சைவாலி (வயது 34), 7 வயது பெண், மற்றும் 3 வயது ஆண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பிரேதங்களை கைப்பற்றி புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடற் கூறாய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அரியாங்குப்பத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மனைவி-குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தியாகராஜன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், கடன் சுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணை நிறைவு பெற்ற பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)