மேலும் அறிய

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

கரூரில் பட்டதாரி பெண் ஒருவர் பலரிடம் ஆசை வார்த்தை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பல லட்சம் வரை மோசடி.

கரூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சௌமியா என்கின்ற சபரி வயது 28. பிகாம் பட்டதாரி. இவரது பெற்றோர் கரூரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது சகோதரி திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சௌமியா சிறு வயது முதலே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?


அவரது நடவடிக்கை பிடிக்காத அவருடைய பெற்றோர்கள் மகளை கண்டித்துள்ளனர். இதை அடுத்து பெற்றோர்களில் பிரிந்த சௌமியா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு ராஜேஷ் என்கின்ற போலீசார் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் தனக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம் உள்ளது. அதனால் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன். என்று கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். பின்னர் தனது கணவரிடம் அந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றியுள்ளார்.

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

 

அதைத் தொடர்ந்து கரூரில் உள்ள மணவாடி பகுதிக்கு வந்து ரூ. 7 லட்சத்திற்கு ஒரு நிலத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். இதற்கிடையே மோசடி தொடர்பான புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சௌமியாவை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த சௌமியா முதல் கணவரான போலீஸ்காரரை உதரி தள்ளிவிட்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடன் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியவர் அவரையும் கழட்டி விட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சொந்த மாவட்டமான கரூருக்கு வந்த சௌமியா காந்தி கிராமத்தில் குடியேறியுள்ளார்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

அங்கும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கிய அவர், தான் ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தனக்கு நெருங்கிய உறவினர் என்ற தகவலையும் பலரிடம் கூறி நம்ப வைத்து, உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கூறி 50 லட்சம் வரை பெற்று எந்த வேலையும் வாங்கி தராமல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதை எடுத்து மூன்றாவதாக மேலும், ஒருவரை சௌமியா திருமணம் செய்துள்ளார். மேலும், நான்காவது ஆக கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்ய சௌமியா தயாராகி வந்துள்ளார். இதற்கிடையில் அடிக்கடி சௌமியா வீட்டை விட்டு மாயமாகியுள்ளார். இந்த நிலையில் சௌமியா காந்தி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அடுத்து காந்திகிராமம் பகுதியில் சௌமியாவை, அவர்கள் கையும் களவுமாக பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை... 4வது திருமணத்திற்கு தயாரான பட்டதாரி பெண் - சிக்கியது எப்படி..?

இதை எடுத்து சௌமியாவிடம் கரூர்  குற்றப்பிரிவு துணை  கண்காணிப்பாளர் சுகுமார், கரூர் நகரதுணை   கண்காணிப்பாளர்  தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சௌமியா மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், அவர் எந்த வங்கிகளும் உதவி மேலாளராக பணிபுரி வில்லை எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து போலீசார் சௌமியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சௌமியா எத்தனை திருமணங்கள் செய்துள்ளார். எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்தார் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நீதிமன்றத்தில் சௌமியாவை ஆஜர் படுத்திய விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரிய வரும் என கருர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரூரில் பட்டதாரி பெண் ஒருவர் பலரிடம் ஆசை வார்த்தை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பல லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget