Watch Video: ”என்னை அனுமதிக்காதது ஏன்?" காவலாளியை செருப்பால் தாக்கிய பெண் - வைரலாகும் வீடியோ...!
கோவாவில் சுற்றுலா பயணி ஒருவர், காவலாளியை செருப்பால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch Video : கோவாவில் சுற்றுலா பயணி ஒருவர், காவலாளியை செருப்பால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவா ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இங்கு வானிலை மிதமானதாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் டிரீப்புக்கு இங்கு வருகின்றனர். கோவாவில் அழகான கடற்கரை, விளையாட்டு தளங்கள், கோயில்கள் என அனைத்தும் மிகவும் பிரபலம். அதனால் இளம் வயதினர் உட்பட பலரும் கோவா வந்து தங்களது பொழுதை கழிக்கின்றனர். இதில் பல அசபாவித சம்பவங்களுக்கு நடக்குகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
காவலாளி மீது தாக்குதல்
கோவாவில் பழைய தேவாலயத்திற்கு வந்த சுற்றுலா பயணி பெண் ஒருவர், அங்கிருந்த காவலாளியை தான் அணிந்திருந்த செருப்பால் தாக்கி உள்ளார். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Police file non cognizable case against woman tourist who hit a security guard with a sandal at Old Goa pic.twitter.com/7rXuRh61ac
— Dev walavalkar (@walavalkar) March 13, 2023
இதனை அடுத்து, போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தேவாலய வளாகத்திற்குள் நுழைவது தொடர்பாக காவலாளிகளுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் அந்த பெண் காவலாளிகளை செருப்பால் அடித்துள்ளதாக” தெரிகிறது என்றனர்.
பொறுத்துக்கொள்ள மாட்டோம்:
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த முதல்வர் பிரமோத் சாவந்த், "காவலாளி மீது பெண் ஒருவர் தாக்கியதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கோவாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் காவல்துறையை அணுக வேண்டும். கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால் அவர்கள் சட்டத்தை பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை அணுக வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்" என்றார்.
முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த மாத தொடக்கத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக அஞ்சுனா என்ற பகுதிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த ஊழியர்கள் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து சுற்றுலா பயணிகளான இரண்டு பேரை வாள் மற்றும் கத்திகளால் சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.