Crime: திருவிழா காணச் சென்ற கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வெள்ளக்கோவிலில் கொடூரம்!
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியில் திருவிழா காணச் சென்ற பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இந்த திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை ஒட்டி இசைக்கச்சேரியை காண பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் 17 வயதுடைய மாணவி குடும்பத்தினருடன் வந்துள்ளார். அவர் முன் வரிசையில் அமர்ந்து இசைக் கச்சேரியை ரசித்து கண்டுகளித்துள்ளார். திடீரென அந்த பெண் காணாமல் போயுள்ளார். எங்கு தேடியும் அந்த பெண் கிடைக்காததால், பெற்றோர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அந்த பெண் வீடு திரும்பியுள்ளார். அப்போது எங்கே சென்றாய் என கேட்டப்போது திருவிழாவில் இசைக்கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் போது தன்னை காட்டுப் பகுதிக்கு பலவந்தமாக தூக்கிச் சென்று 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
உடனடியாக அருகில் இருக்கும் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் உணவக தொழிலாளிகளான வெள்ளக்கோயில் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் (வயது 32) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.