சென்னையில் அதிர்ச்சி.. Event Management - ல் வேலை, பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் ஈடுபடுத்திய கும்பல்
வெளி மாநில பெண்களை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 10 பெண்கள் மீட்பு.

பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்
சென்னை சாலிகிராமம் பகுதியில் பெண்களுக்கு ஈவன்ட் மேனேஜ் மெண்ட்டில் வேலை இருப்பதாக கூறி வெளி மாநில பெண்களை வரவழைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு , கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகா அவர்களின் நேரடி மேற்பார்வையில் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் விபச்சார தடுப்பு பிரிவு , காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் இரகசியமாக கண்காணித்து வந்தனர்.
பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த காவல் துறையினர்
இந்நிலையில் சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவில் Sri Sai Homes , மற்றும் அதே பகுதியில் காந்தி நகர் , பாரதி தெருவிலும் Sri Sai Homes ஆகிய முகவரியில் உள்ள வீடுகளில் வெஸ்லி (எ) ரஞ்ஜித் மற்றும் மாயா (எ) ஓம்காரேஷ்வரி ஆகிய இருவர் 10 பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வருவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் அவர்கள் தலைமையில் , விபச்சார தடுப்பு பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit-1) காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வீடுகளில் கண்காணித்து பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்து , சம்பவ இடத்தில் வைத்து அசோக்நகர் பகுதயை சேர்ந்த 1.வெஸ்லி (எ) ரஞ்ஜித் ( வயது 46 ) மற்றும் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 2.மாயா (எ) ஓம்காரேஷ்வரி ( வயது 32 ) ஆகிய இரு நபர்களை கைது செய்து , அவர்களது பிடியிலிருந்த கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 10 பெண்களை மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட 10 பெண்கள் சென்னை மயிலாப்பூர் அரசினர் மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
அவசரமாக போன் பேச வேண்டும் என செல்போனை வாங்கி , திருப்பி கேட்டவரை பிளேடால் தாக்கிய நபர்
இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டிராவிட் ( வயது 23 ) என்பவர் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த தினங்களுக்கு முன்பு இரவு நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது , அங்கு வந்த நபர் ஒருவர் மேற்படி டிராவிட்டிடம் அவசரமாக போன் பேச வேண்டும் எனக் கூறி செல்போனை வாங்கி அவரது பாக்கெட்டில் வைத்துள்ளார். டிராவிட் அவரிடம் செல்போனை திரும்ப கேட்ட போது., அந்த நபர் பிளேடால் டிராவிட்டை தாக்கியுள்ளார்.
டிராவிட் சுதாரித்துக் கொண்டு அவரது செல்போனை பிடுங்கியுள்ளார். அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து டிராவிட் K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிக்க முயன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியை சேர்ந்த மணிரத்தினம் , ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மனிரத்தினம் V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது ஏற்கனவே 15 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிரத்தினம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















