Crime: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் கைது.
காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பொது இடத்தில் காவலரை தாக்கியது உட்பட தனபால் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனபாலை சிறையில் அடைத்தனர்.
![Crime: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் கைது. Former Chief Minister Jayalalithaa's car driver Kanagarajan's brother Dhanapal arrested. Crime: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் கைது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/19/3d7b7071f115bcaa14bcad04628c181e1724041089294113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர்கள் அழகு துறை, பழனிசாமி, மூர்த்தி மற்றும் அரிசியப்பன் இருவரும் நேற்று மாலை தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது எடப்பாடி அடுத்துள்ள சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அழகு துறையிடம் என் மீது மேச்சேரி காவல் நிலையத்தில் பொய் வழக்கு போட நீயும் உகந்தையாக இருந்தாய் எனக்கு ஒரு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அருகில் இருந்த காவலர்கள் தடுக்கும் காவலரை தாக்குவதை நிறுத்தாத தனபால், அழகு துரையை சட்டையை பிடித்து கீழே தள்ளி தாக்கியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த காவலர்கள் தனபாலை தடுத்துள்ளனர். அப்போது தனபால், மேச்சேரி இன்ஸ்பெக்டரையும், அழகு துறையையும் கொள்ளாமல் விடமாட்டேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தாரமங்கலம் காவல்துறையினர் தனபாலை கைது செய்துள்ளனர். காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பொது இடத்தில் காவலரை தாக்கியது உட்பட தனபால் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள தனபால் அவ்வப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார்களை தெரிவித்து வந்தார். மேலும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணையில் உள்ள தனபால் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியில் இருந்த காவலரை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக தனபால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)