மேலும் அறிய

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடன் திருப்பி தர இயலாத காரணத்தினால் 4 பெண் பிள்ளைகள் வீட்டில் வைத்து பூட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (45) அவரது மனைவி அஞ்சுகம் வயது (39) இந்த  தம்பதியினருக்கு ரித்விகா வயது (17) சத்விகா வயது (17) ரிஷ்கா வயது (15) ஆகிய 3 பெண் குழந்தைகளும் ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். ரகுவின் மனைவி அஞ்சுகம் என்பவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் கூலி தொழிலாளி ரகு என்பவர் கொரோனா காலத்தில் வேலை செல்ல முடியாமல் உறவினரான பாரதியார் தெருவை சேர்ந்த கேஷ்டிராஜா  (50) என்பவரிடம் கடந்த 18 மாதங்கள் முன்  2.50 லட்சத்தை வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார்.

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

ஊரடங்கு காரணமாக ரகுவிற்கு வேலை சரியாக இல்லாத காரணத்தினால் வட்டி கட்ட முடியவில்லை, கடன் கொடுத்தவர் கேஷ்டிராஜா கடனை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ரகுவும் அவரது மனைவி அஞ்சுகமும் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த கேஷ்டிராஜா பணம் தரவில்லை, என்பதால் வீட்டில் இருந்த ரகுவின் மூன்று மகள்கள் மற்றும் வீட்டிற்கு வந்த உறவுக்கார பெண்ணான யோகேஷ்வரி ஆகிய 4 பெண்களையும் வீட்டில் உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையொடுத்து ரகு மற்றும் அஞ்சுகம் ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர்.

பெற்றோர் வாங்கிய கடனுக்காக 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய நபர் கைது...!

மேலும் உடனடியாக வந்த தாய் அஞ்சுகம் உடனடியாக ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆரணி நகர காவல்துறையினர் சம்பவடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கூலி தொழிலாளி ரகு பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலாத காரணத்தினால் கடன் கொடுத்த உறவினர் வீட்டை பூட்டியதாக விசாரணையில் தெரியவந்து.  மூன்று மணி நேரத்திற்கு பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை திறந்து  4 பெண் பிள்ளைகள் மீட்டனர்.

இந்நிலையில் இது சம்மந்தமாக வீட்டை பூட்டிய கேஷ்டிராஜா என்பவரை ஆரணி நகர காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் பெற்றோர் பெற்ற கடனுக்கு பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget