மேலும் அறிய

7 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்: கர்நாடகாவில் தேடப்படும் மருத்துவர்

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, டிசம்பர் 1ம் தேதி ஷைலேஷ் தனது வீட்டில் 7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்துள்ளார்

கர்நாடகாவின் பட்கல் நகரில் ஒரு மருத்துவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்கல் நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு சிறுவனை மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை அடுத்து, குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் டாக்டர் ஷைலேஷ் எம்.தேவடிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இப்போது தலைமறைவாக உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, டிசம்பர் 1ம் தேதி ஷைலேஷ் தனது வீட்டில் 7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்துள்ளார். அவர்களின் புகாரில், ஷைலேஷ் தங்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்கு பழகியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 1 ஆம் தேதி, ஷைலேஷ் தனது வீட்டில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, உள்ளூர் மக்கள் ஷைலேஷின் நிர்வாகம் குறித்த பல வதந்திகளால் குழப்பமடைந்துள்ளனர். ஷைலேஷ் தனது பெயரை “ஷைலேஷ் எம் தேவாடிகா” என்று பயன்படுத்தியதாகவும், தன்னை ஒரு எம்.டி.யாகக் காட்டிக்கொள்ள அதை காட்சி மற்றும் விளம்பரப் பலகைகளில் “ஷைலேஷ் எம்.டி” என்று பயன்படுத்தியதாகவும் சமூக ஊடக பயனர்கள் கூறியுள்ளனர்.

"அவர் உண்மையில் ஒரு ஆயுர்வேத மருத்துவர், அவர் தட்சிண கன்னடாவில் உள்ள புத்தூரைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை எம்.டி.யாக முன்னிறுத்துவதற்காக தனது பெயரைப் பயன்படுத்துகிறார். எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் அவரை ஒரு எம்.டி என்று நம்புகிறார்கள்” என்கின்றனர் சிலர்.

சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து, சைலேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும், டாக்டரை போலீசார் தேடி வரும் நிலையில், ஊரை விட்டு தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

7 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்: கர்நாடகாவில் தேடப்படும் மருத்துவர்

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
Sexual Assault - பாலியல் தொல்லை
Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
Sexual Harassment - பாலியல் தொந்தரவு
Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை 
இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்;  அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
Embed widget