Crime : டெல்லியில் இருந்து வந்து இறங்கிய போதை மாத்திரைகள்... தங்களுக்கு தாங்களே ஊசி செலுத்திக்கொண்டவர்கள் கைது..
அந்தியூர் அருகே தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அந்தியூர் அருகே தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கருப்புசாமி கோவில் பகுதியில் சிலர் போதையில் இருப்பதாக அந் தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற னர்.
அப்போது அங்கு 7 பேர் தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவர்கள் அனைவ ரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்டவர்களி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க : பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி உயர்வு குறித்து கருத்து? ரஜினி சொன்ன பதில் இதுதான்..
போலீசாரின் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு: அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23), யுவராஜ் (32), விக்னேஷ் (21), மற்றொரு யுவராஜ் (27), சிந்தகவுண்டம் பாளையத்தை சேர்ந்த பால்ராஜ் (28), அந்தியூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (28), கண்டன் (25) ஆகிய 7 பேர் டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து கூரியர் மூலம் 100 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரையை ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளனர்.
அதன் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மலை கருப்புசாமி கோவில் பகுதிக்கு சென்று உள்ளனர். அங்கு போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசியில் எடுத்து தங்களுக்கு தாங்களே உடலில் செலுத்தி கொண்டு உள்ளனர். மேலும் சிகரெட்டை வாங்கி போதை மாத்திரை கரைத்த தண்ணீரில் நனைத்து அதை புகைபிடித்து உள்ளனர். இதனால் போதையில் அவர்கள் எழுந்திருக்க முடியாமல் விழுந்து கிடந்து உள்ளனர். மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க : விஜய் என்றாலே இப்படித்தான்.. அமீர்கான் சொன்ன ஒத்த வார்த்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு தாங்களே போதை ஊசியை செலுத்திக்கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்