மேலும் அறிய

காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

காதலியின் பிறந்த நாளுக்கு ஐ-போன் பரிசாக வழங்க பணம் தேவைப்பட்டதால், 10-ம் வகுப்பு மாணவியின் நகையை பறித்து தப்பிய இளைஞர் கைது

சாலையில் நடந்து சென்ற மாணவியின் செயின் பறிப்பு

சென்னை அண்ணாநகர் கிழக்கு பள்ளியரசன் தெருவைச் சேர்ந்த மலர் விழி ( வயது 40) கடந்த 24-ம் தேதி இரவு தனது 10-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஓட்டலுக்கு சென்றார். அதே பகுதி கெனால் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், திடீரென மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை பறித்து தப்பிச் சென்றார்.

இது குறித்து மலர்விழி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவியில் சிக்கிய இளைஞர்

கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததுடன், பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் பதிவெண் இல்லாததால் விசாரணையின் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் , கொள்ளையன் அணிந்திருந்த சட்டையில் வரிக் குதிரை படம் மற்றும் தனித்துவமான கோடு வடிவமைப்பு இருந்ததை போலீஸார் கவனித்தனர்.

அதையே முக்கிய தடயமாகக் கொண்டு, பல்வேறு சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்து, சந்தேக நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்த சரவணன் ( வயது 24 ) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

காதலிக்கு ஐ - போன் பரிசு

அவரிடமிருந்து மாணவியிடம் பறிக்கப்பட்ட நகை மீட்கப்பட்டதுடன், குற்றச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், சரவணன் அண்ணாசாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் துணிக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

மேலும், தனது காதலியின் பிறந்த நாள் அடுத்த வாரம் வர இருந்ததால், அவருக்கு 'ஐபோன்' பரிசாக வழங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு தேவையான பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சரவணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆசை ஆசையாய் காதல் திருமணம்! 4 மாதங்களில் ராஜேஸ்வரி விபரீத முடிவு! அப்படி என்ன செய்த கணவர்?
ஆசை ஆசையாய் காதல் திருமணம்! 4 மாதங்களில் ராஜேஸ்வரி விபரீத முடிவு! அப்படி என்ன செய்த கணவர்?
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை! எங்கெல்லாம் கொட்டப்போகுது?
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை! எங்கெல்லாம் கொட்டப்போகுது?
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget