மேலும் அறிய

Embryo Donation: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: சேலம் சுதா ஸ்கேன் சென்டருக்கு சீல்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுதா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பரிசோதனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து கூறியுள்ளார். அதுகுறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர். அதில் சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு சிறுமியின் தாய் இந்திராணி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி உள்ளிட்டோரை கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கருமுட்டை மருத்துவமனையில் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை செய்துகொடுத்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.

Embryo Donation: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: சேலம் சுதா ஸ்கேன் சென்டருக்கு சீல்

இதுகுறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் கருமுட்டை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் சிறுமி உண்மையான வயது மற்றும் பெயர் நீக்கம் செய்யப்பட்டு சிறுமி உறவினர்கள் சம்மதத்துடன் 6 தனியார் மருத்துவமனைகள் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சுதா மருத்துவமனை சேலம் மற்றும் ஈரோடு கிளை, பெருந்துறையில் உள்ள ராம் பிரசாத் மருத்துவமனை, விஜய் மருத்துவமனை ஓசூர் உட்பட 6 தனியார் மருத்துவமனைகள் சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியிடமிருந்து பெறப்பட்ட போலி ஆதார் அட்டையில் ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததாகவும், மற்றவர்களிடம் பெறப்பட்ட ஆதார் அட்டையில் இரு பக்கமும் அச்சிடப்பட்ட நகலை மருத்துவமனைகள் வாங்கியது தெரியவந்துள்ளது. எனவே போலி ஆதார் அட்டை என தெரிந்தும் வணிக ரீதியாக செயல்பட்ட மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது என்று கூறினார். இது மட்டுமின்றி கருமுட்டை வழங்கப்படுபவர் கணவர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட்டு அவரிடம் அனுமதி பெற வேண்டும், ஆனால் சிறுமியின் கணவர் என போலியாக இருவரை உருவாக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக கருமுட்டை சிகிச்சை செய்த தமிழகத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகளும் 15 நாட்களுக்குள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Embryo Donation: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: சேலம் சுதா ஸ்கேன் சென்டருக்கு சீல்

இதைத்தொடர்ந்து நேற்று  சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்களின் மூலம் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் சுகாதாரத்துறை இணை இயக்குனர், சிறுமியின் கருமுட்டை சட்ட விரோதமாக எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுதா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பரிசோதனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அனுப்பியவுடன் மருத்துவமனைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும் என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
Embed widget