மேலும் அறிய

யூடியூப் பார்த்து ஓட்டய போட்டு ஆட்டய போட பாத்த இன்ஜினியர்...சவுண்டு கேட்டு எழுந்து வந்ததால் எஸ்கேப்...!

தனக்கு அதிக கடன் இருப்பதால், அதில் இருந்து தப்பிக்க  நினைத்து யூடியூப் சேனலில் திருடுவது சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்து நகைக்கடையில் திருட முயற்சித்தேன்.

யூடியூப் பார்த்து நகை கடை சுவரில் ஓட்டை போட்டு திருட முயன்ற இன்ஜினீரை போலீஸார் கைது செய்தனர். 

பத்ரி என்பவர், ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் உள்ள கடைத் தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு மேல் உள்ள வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் கடையை மூடிவிட்டு தனது வீட்டுக்கு சென்ற நிலையில், நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிக்கும் சத்தம் தூங்கிக்கொண்டிருக்கும் சீனிவாசனுக்கு கேட்டுள்ளது. உடனே கீழே இறங்கி வந்த பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சிக்கு காரணம், நகைக்கடை சந்தில் ஒருவர் கடையின் சுவரை இடித்துக்கொண்டிருந்தார். சீனிவாசனை கண்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

இதனைத்தொடர்ந்து, சீனிவாசன் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்க, அவரை இதுகுறித்து போலீசாரிடம் கூறினார். அவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது நகைக்கடை சுவரில் ஒரு நபர் நுழையக்கூடிய அளவில் ஓட்டை போட்டு திருட முயற்சி நடந்ததை கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சத்தியமங்கலம் போலீசார், திருட முயன்ற நபரை பிடிக்க தனிப்படை அமைத்தது. அந்த தனிப்படை தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் கரூர் அருகேயுள்ள மலையபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ராஜபாண்டியன் என்பவரை கைது செய்தனர். 

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் டிப்ளோமோ இன்ஜினியரிங் படித்துள்ளதாகவும், நூற்பாலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும் கூறினார். மேலும், தனக்கு அதிக கடன் இருப்பதால், அதில் இருந்து தப்பிக்க  நினைத்து யூடியூப் சேனலில் திருடுவது சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்து நகைக்கடையில் திருட முயற்சித்ததாகவும் கூறினார். ராஜபாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget