மேலும் அறிய

வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த கீழப் பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயக்குமாரி. இவர் அரசு  விடுதியில் சமயலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக கீழப் பிள்ளையார்குளம் பகுதியில் வயல் வெளிகள் இருந்துள்ளது. தங்களது காலங்களை வயல்வெளிகளில் செலவு செய்து அதனை கவனித்து வந்துள்ளனர். இந்த  நிலையில் தனது நிலத்தில் ஜெயக்குமாரி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய பணம் இல்லாத நிலையிலும், குடும்பத்தின் அத்தியாவசிய செலவிற்காகவும் தனியார் நிறுவனங்களிடமும், வெளி நபர்களிடமும் 10 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் கடன் சுமை அதிகரித்ததால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு வயல்வெளி பகுதியில் உள்ள குளத்தின் அருகே விஷம் அருந்திய நிலையில் வாயில் நுரை தள்ளி கிடந்துள்ளனர். இதனை அப்பகுதி வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்துள்ளனர். வாயில் நுரையுடன் இறந்த நிலையில் இருவரும் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


வயல்பகுதிக்கு சென்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதியினர்..! நெல்லையில் சோக சம்பவம்..!

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் கணவன் மனைவி இருவரும் கடன் பெற்ற நபர்கள் மூலம் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்பகுதியில் தம்பதியர்  விஷம் அருந்தி ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அக்கிராம மக்களிடையே  மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget