மேலும் அறிய

கடலூர்: பள்ளி மாணவர்களிடையே சாதி பிரச்னை! திடீரென வகுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

கடலூர் அருகே வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்கியதில் 8 பேர் காயமடைந்தனர். இதனால் சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அடுத்த வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இதில் 10-ம் வகுப்பு படிக்கும் இருவேறு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று  மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதை பார்த்த ஆசிரியர்கள் தகராறை விலக்கிவிட்டு, மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு வந்து, பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளுடன் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.


கடலூர்: பள்ளி மாணவர்களிடையே சாதி பிரச்னை! திடீரென வகுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

அதன் பேரில் பள்ளிக்கூடம் முன்பு காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அறிந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் இன்று காலை 11 மணி அளவில் சுவர் ஏறி பள்ளிக்குள் புகுந்தனர். பின்னர் வகுப்பறைக்குள் புகுந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மாணவர்கள் மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை பற்றி அறிந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கூடம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி சக மாணவ-மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து பள்ளிக்கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


கடலூர்: பள்ளி மாணவர்களிடையே சாதி பிரச்னை! திடீரென வகுப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

இதையடுத்து அங்கிருந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பள்ளிக்கூடம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Embed widget