Crime | விபரீதமான ஆன்லைன் டேட்டிங் : சங்கிலியால் கட்டி, சிறுநீர் கழித்து பெண்ணை கொடுமைப்படுத்திய கொடூரன் கைது..
ஆன்லைனில் சந்தித்த பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் சமீப காலங்களாக பலரும் காதல் வயப்பட்டு வருகின்றனர். அத்துடன் அதன்பின்னர் அவர்கள் நேரில் சந்தித்து பழகவும் செய்கின்றனர். அவற்றில் ஒரு சில நேரங்களில் இதுபோன்ற சந்திப்புகள் பாலியல் வன்கொடுமையில் சென்று முடிந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் 28 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை சார்லஸ் அக்போவிட்டா(33) என்ற நபர் ஆன்லைனில் ஒரு டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார். அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆன்லைனில் சேட்டிங் செய்து வந்துள்ளனர். அதன்பின்னர் ஒருநாள் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பெண் அக்போவிட்டாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாக தெரிகிறது.
அங்கு சென்ற அவர் அப்பெண்ணிடம் முதலில் நன்றாக நடந்து கொண்டுள்ளார். இருவரும் முதலில் விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த வாக்குவாதத்திற்கு பிறகு அப்பெண் அந்த நபரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்து அந்த அக்போவிட்டா அந்த பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அந்தப் பெண்ணை சங்கிலியின் மூலம் கட்டி வைத்து மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பெண் உடம்பில் காயங்கள் ஏற்படுத்தியதுடன் அவர் மீது சிறுநீர் கழித்தாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அக்போவிட்டாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின்பு அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தன்னுடைய குற்றத்தை கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை.
எனினும் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் அந்தப் பெண் தன்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரின் தைரியத்தை நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி இந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த குற்றவாளியை விரைவாக பிடித்த காவல்துறையினரையும் நீதிமன்றம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உண்ட வீட்டிற்கே துரோகம்... நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளை: விருத்தாசலத்தில் பிடிபட்ட திருடன்!