உண்மை பேசிய மணமகன்.. நாடகமாடிய மணமகள்.. குழப்பத்தில் முடிந்த திருமணம்

மணமகனைப் பிடிக்காத மணப்பெண் நடத்திய நாடகத்தால் இருதரப்பு பெற்றோரும் குழப்பத்தில் தவித்தனர்

FOLLOW US: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ., பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூரியாவுக்கும் கடந்த 17-ஆம் தேதி புதுவயலில் உள்ள கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையாக திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புது மணத்தம்பதி  இருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியறைக்கு சென்றுள்ளனர். இருவரும் தங்கள் கடந்த கால நிகழ்வுகளை பேசியுள்ளனர். அப்போது புதுமாப்பிள்ளையான வெற்றிவேல் திரைப்படத்தில் கதாநாயகன் கூறுவது போல மனைவி சூரியாவிடம் ‘‘திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அதில் தோல்வியடைந்ததாகவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துள்ளேன். கடைசி வரை உன்னை நல்ல முறையில் காப்பாற்றுவேன்’’ என கடந்தகால பல நினைவுகளை மனம் விட்டு உண்மையாக பேசியுள்ளார்.உண்மை பேசிய மணமகன்.. நாடகமாடிய மணமகள்.. குழப்பத்தில் முடிந்த திருமணம்

இந்நிலையில் புதுப்பெண் சூரியா கணவரை தனியாக உறங்க சொல்லிவிட்டு, அவரும் அந்த அறையில் தூங்கியுள்ளார்.  அதிகாலை கண்விழித்த வெற்றிவேல் அவரது அப்பாவை எழுப்பி, தன் அறையில் புதுப்பெண் சூரியா மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார். அவர்கள் சூரியாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரியாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் சூரியா ‘‘தன் கணவர் சைக்கோவைப்போல நடந்து கொள்வதாகவும், தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி முடியை வெட்டி, மயக்க மாத்திரை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பெற்றோருடன் சூரியா காரைக்குடி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.உண்மை பேசிய மணமகன்.. நாடகமாடிய மணமகள்.. குழப்பத்தில் முடிந்த திருமணம்

இதற்கிடையே, புது மணத்தம்பதி இருவரையும் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது, பெற்றோர்கள் இரு தரப்பும் வாக்குவாதம் ஏற்பட பெற்றோர்களிடமும், புது மணத்தம்பதி இருவரிடரும் காரைக்குடி டி.எஸ்.பி அருண் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மணப்பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பிடிக்காத திருமணம் , கணவனை பழிவாங்க  திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், மணமகன் நிரபராதி என்பது விசாரனையில்  தெரியவந்துள்ளது. 

Tags: False Dowry Complaint against husband False Dowry Complaint False Dowry Case Fake Dowry Case newly married woman False Dowry Complaint against husband Sivaganga crime News TN Crime News Latest Crime News Crimes News in tamil Vetrivel weds Surya Fake Domestic Violence case Domestic Violence act

தொடர்புடைய செய்திகள்

சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்..! மீண்டும் சிறையில் அடைத்தது போலீஸ்..! என்ன நடந்தது?

ஆபாச யூ ட்யூபர் மதன் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

ஆபாச யூ ட்யூபர் மதன் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!

சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!