அரசுப் பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது
பழனியில் அரசு பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது
பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீரூடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Breaking Tamil LIVE: திருவள்ளுவருக்கு விபூதி குங்குமம் வைத்த திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக கலை செல்வி (38) என்ற பெண் பணியாற்றி வருகின்றார். இவர் காலை வழக்கம் போல் சமையல் செய்வதற்காக பள்ளிகூடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரான பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரன் என்பவர் சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருக்கிறார் .
IPL 2024 GILL: கோலியின் சாதனையைத் தகர்த்த சுப்மன் கில் - 25 வயதுக்குள் 3 ஆயிரம் ரன்கள்..!
அப்போது சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டி கொண்டிருக்கும் போது அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த கலைச்செல்வி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகுடிஸ்வரன் மீது மானபங்கம் செய்தல் ,வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கிழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
பழனி அருகே அரசு காலை உணவு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், பாஜக மாவட்ட செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் பதியப்பட்ட நாள் முதல் தலைமறைவான பாஜக மாவட்ட செயலாளர் போலீசார் தனிப்படை அமைத்து கடந்த மூன்று நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.