Digital Scams: அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடி.! I4C அமைப்பை கையிலெடுத்த மத்திய அரசு.!
Online Scam: டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்களை நடைமுறையை கையாள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை' (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
இணையவழி குற்றங்கள்:
இந்தியாவில் மட்டுமன்றி உலகளவிலும் சமீப காலங்களில், இணைய வழியிலான குற்றங்கள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக தொழில்நுட்ப வளர்ச்சியை முக்கிய காரணமாகும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் , எங்கு இருப்பவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்திருக்கிறது. அதற்கு , வாட்சப் ,ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட பல செயலிகள் உள்ளன.
இதனால், பல நன்மைகள் இருந்தபோதும் , சிலர் இதை தவறாகவும் , குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதற்கும் பயன்படுத்துகின்றன.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதன் மூலம் பணப்பறிக்கும் மோசடியிலும் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக Fedex கூரியர் மூலம் , பல லட்சத்தை இழந்ததா, சில தொழிலதிபர்கள் புகார் கொடுத்த செய்திகளும் வந்தன.
மத்திய அரசு விளக்கம்:
இந்நிலையில், இணையவழியிலான சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக , இன்றைய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “
இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்படி 'காவல்துறை', 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவையாகும். இணையதள குற்றம், டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது போன்றவை மாநிலக் காவல்துறைகளின் முதன்மையான பொறுப்பாகும்.
மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகளையும் நிதி உதவியையும் அளிக்கிறது.
Also Read: Fengal Cyclone: இன்று இரவு இந்த 11 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
ஐ4சி அமைப்பு :
டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை விரிவானதாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை' (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.