மேலும் அறிய

சொத்துக்காக தந்தை, தங்கை வெட்டிக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்

ஊத்தங்கரை அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் தங்கையைv வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பொட்டு காரம் பட்டி சேர்ந்தவர் வரதன்(80). விவசாயியான இவரது மனைவி கடந்த  30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது மகன்கள் லவகிருஷ்ணன் (57) கணேசன் (47) கிருஷ்ணன் மகள்கள் மனவள்ளி (55) மங்கம்மாள் (45). இதில் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் அளவில் நிலம் எடுத்துக்கொண்டு வீடு கட்டி வசித்து வருகின்றனர். மனவள்ளி கணவன் முருகேசன் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து விட்டார். இவருக்கு மகன் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனவள்ளி மட்டும் தனியாக வசித்து வந்தார். மேலும் அப்பா சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று அப்பா நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். மூத்த மகன் லவகிருஷ்ணன் விவசாயம் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் இருவரும் இறந்துவிட்டனர். இவரது மகள் கல்லாவியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனவள்ளிக்கும் தனக்கும் வாரிசு படி அப்பா சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு 2015 இல் ஊத்தங்கரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனால் அதிர்ச்சியான வரதன் மகன் லவகிருஷ்ணனிடம் சொத்தை பிரிக்கக்கூடாது நீதான் வழக்கை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். லவகிருஷ்ணனும் வக்கீலை சந்தித்து பேசி வழக்கை நடத்தி வந்துள்ளார்.

பலகட்ட பேச்சு வார்த்தையும் நடந்து வந்துள்ளது. கடந்த 06.06 24 மனவள்ளி தொடர்ந்து வழக்கு தள்ளுபடி ஆனது.  இதை அடுத்து லவகிருஷ்ணன் இந்த வழக்குக்காக பல லட்சம் செலவு செய்துள்ளேன் சொத்தை பிரித்து எனக்கு தர வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்து கேட்டு யார் வழக்கு போட்டாரோ அவருக்கே சொத்தை கொடுப்பேன் என வரதன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அப்படி செய்தால் கொல்லாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்.

சொத்துக்காக தந்தை, தங்கை வெட்டிக்கொலை - பட்டப்பகலில் பயங்கரம்

விஏஓ அலுவலகம் முன்பு தந்தை தங்கையை வெட்டிய நபர்

இந்நிலையில் நேற்று வரதன் தன்னுடைய சொத்து தொடர்பாக அனுபவச்சான்று வாங்குவதற்காக மகள் மனவள்ளியுடன் மூன்றாம் பட்டி விஏஓ அலுவலகத்திற்கு சென்றார். இதனிடையே இதனை அறிந்தால் ராதா கிருஷ்ணன் அங்கு அறிவாளுடன் சென்றார். அங்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தந்தை வரதனையும் தங்கை மனவள்ளியையும் சராமாரியாக வெட்டினார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் ரத்த வெள்ளத்தில் சரிந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அதனை கண்டு அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை விசாரணை

தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்பி தங்கதுரை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்திரகுமார் விஏஓ கவியரசு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த வரதன் மனவள்ளி ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மூன்றாம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவியரசி சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து பகுதியில் இருந்த லவகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தந்தை தங்கையை கொன்றது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பட்டப்பகலில் தாய் தந்தை தங்கையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget