மேலும் அறிய

பிரபல பிரியாணி கடையில் இளைஞர் குத்தி கொலை - தருமபுரியில் அதிர்ச்சி

தருமபுரியில் பிரியாணி கடையில் பணிபுரிந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கும்பல் தப்பி ஓட்டம்.

தருமபுரி: இலக்கியம்பட்டி பகுதியில் மூன்று வாரங்களுக்கு முன்ப புதியதாக தொடங்கப்பட்ட பிரபல பிரியாணி கடையில்  பணிபுரிந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி இலக்கியம்பட்டியில் கடந்த 6 -ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் கிரில் மாஸ்டராக தருமபுரி வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். 

இவர் வழக்கம்போல் இரவு  ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் இரவு 10 மணிக்கு ஓட்டலுக்கு  4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். 

இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த ஓட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்து விலகி நின்றனர்.

உடனடியாக கத்தியால் குத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர  போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  கொண்டு  சென்றனர். 

தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 

பின்னர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? எதற்காக இந்த இளைஞரை கொலை செய்தனர் இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர் காதல் விவகாரமா என்பது குறித்து கொலையாளிகளை கைது செய்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

தர்மபுரி , சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே கிரில் மாஸ்டர் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தர்மபுரி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆறாம் தேதி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget