Delhi murder case: ஷ்ரத்தா ரத்தக்கறையை அப்தாப் சுத்தம் செய்தது எப்படி? அதிர்ச்சி தகவல் தந்த டெல்லி போலீஸ்..!
ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு ரத்தக் கறை படர்ந்த தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை அப்தாப் பயன்படுத்தி உள்ளதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.
ரத்தக்கறையை சுத்தம் செய்தது எப்படி?
இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் புதிய தகவலை தெரிவித்துள்ளது. அதில் பல அறியப்படாத தகவல்களை காவல்துறை வெளிகொண்டு வந்துள்ளது.
அதில் அப்தாப் ஒரு பயிற்சி பெற்ற சமையல்காரர் எனவும் மிகவும் பிரபலமடைந்த தாஜ் ஹோட்டலில் சமையல் (chef) பயிற்சி பெற்றவர் என்றும் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், உடல் சதையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றியும் அப்தாப்க்கு தெரியும். ஸ்ர்தாவை கொலை செய்த பிறகு தரையில் இருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்வதற்கு உலர் ஐஸ் மற்றும் பல ரசாயணங்களை அப்தாப் பயன்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புதிய காதலி:
இதனை அடுத்து, ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு, ஒரு வாரத்தில் அப்தாப்வுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஷர்தாவுக்கு கொடுத்த மோதிரத்தை புதிய காதலிக்கு அப்தாப் கொடுத்துள்ளது என்ற தகவலை டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், ஷர்த்தாவை கொலை செய்த பிறகு, அவரின் வங்கி கணக்கில் இருந்த அப்தாப் ரூ.54,000 தனது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை அப்தாப் எரித்திருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு குறித்து நேற்று நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் அமித் பிரசாத் மற்றும மதுகர் பாண்டே ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த வழக்கு பற்றி விவாதித்தனர். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு டெல்லி காவல்துறை தரப்பில் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மக்கள் அதிர்ச்சி:
இதற்கு முன்பு, இந்த கொலை வழக்கில், 6,629 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறை சாகேத் நீதிமன்றத்தில் ஜனவரி 24ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்திய தண்டனைச் சட்டம், 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 150க்கும் மேற்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக தினம் தினம் வெளியாகும் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: வாயில் சிகரெட்.. கையில் கத்தியுடன் சிக்கிய ரீல்ஸ் தமன்னா... கைது செய்ய தனிப்படை தீவிரம்..!