Crime: ”பாலியல் தொந்தரவு; வீடியோ எடுத்து மிரட்டல்..." ஆத்திரத்தில் ஆசிரியரை கொன்ற 14 வயது சிறுவன்.. ஷாக்!
டெல்லியில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை, 14 வயது சிறுவன் கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime: டெல்லியில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை, 14 வயது சிறுவன் கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்:
டெல்லி ஜாமியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்ததை பார்தது அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரின் உடலின் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் 28 வயதான ஆசிரியர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "28 வயதான ஆசிரியர் டியூசன் செண்டர் நடத்தி வருகிறார். இவர் ஜாகீர் நகரில் தனது தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்பாலின் ஈர்ப்பாளரான இந்த ஆசிரியர், தன்னிடம் பாடம் கற்றுக் கொள்ள வந்த 14 வயது சிறுவனிடம் சில மாதங்களாகவே பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இதனை பலமுறை வாடிக்கையாக கொடுள்ளார் ஆசிரியர். இதுபோன்று பாடம் கற்க வரும் சிறுவனிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
கழுத்தை அறுத்துக் கொலை:
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி அந்த ஆசிரியர், சிறுவனை பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார். ஆனால், அந்த சிறுவன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை வரவேண்டும் என்று அழைத்துள்ளார். மேலும், வராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியிருக்கிறார். ஆசிரியர் அழைப்பின்பேரில் அங்கு வந்த சிறுவன், அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
கொலை செய்யப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நேற்று சிறுவனை பிடித்திருக்கிறோம். முழு விசாரணைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும்" என்று போலீசார் தெரிவித்தனர். பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை 14 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க