மேலும் அறிய

Cyber crime:ஆன்லைன் வணிகத்தில் அதிக லாபம்; தஞ்சையில் 2 பேரிடம் ரூ.12.82 லட்சம் மோசடி

இதை நம்பிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 85 ஆயிரத்து 21 செலுத்தினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆன்லைன் வாயிலாக 2 பேரிடம் ரூ. 12.82 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்று பலரும் ஆன்லைன் டாஸ்க், பிட்காயின் போன்றவற்றில் ஏமாந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் அருகே வேலை தேடி வரும் 24 வயது இளைஞரின் பேஸ் புக் மூலம் மர்ம நபர் ஒருவர் ஜூலை மாதம் அறிமுகமானார். அப்போது, ஆன்லைன் வாயிலாக வணிகம் செய்யலாம். அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பண பரிவர்த்தனை, இருப்பு பராமரிப்பு, சர்வர் பிரச்னை, வழக்குரைஞர் கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய இளைஞர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 5 லட்சத்து 97 ஆயிரத்து 400 செலுத்தினார். ஆனால், அதன் பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தன்னை அந்த மர்மநபர் ஏமாற்றியது இளைஞருக்கு தெரிய வந்தது. இது குறித்து அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இணையவழி மூலம் வேலை தருவதாகவும், டாஸ்குகளை நிறைவேற்றினால் ரேட்டிங் உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது. இதை நம்பிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 85 ஆயிரத்து 21 செலுத்தினார். அதன் பின்னர் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் வேலைவாய்ப்பு, டாஸ்க் முடித்தால் கூடுதல் லாபம், முதலீட்டுக்கு இருமடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. எனவே இதுபோன்று வரும் அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பழகி வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடியாக பறிப்பவர்கள், ஏடிஎம் கார்டு மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி ரகசிய நம்பரை வாங்கி பணம் மோசடி என்று ஏராளமான ஆன்லைன் மோசடிகள் நடக்கிறது. 

அதேபோல் வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு ரகசிய எண் கேட்டு வரும் அழைப்புகளையும் நிராகரிக்க வேண்டும். இல்லாவிடில் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோய்விடும். மேலும், பிட்காயின், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று வரும் அழைப்புகளையும் நம்ப வேண்டாம். எனவே இளைஞர்கள், பெண்கள் யாரும் இதுபோன்று வரும் அழைப்புகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget