மேலும் அறிய
Advertisement
வயிற்றுக்குள் கிலோகணக்கில் போதை பொருள்! கேப்சூல் வடிவில் கடத்திய வெளிநாட்டு நபர்! ஷாக் சம்பவம்!
சென்னை விமான நிலையத்தில் சுமார் 8.86 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பிடிபட்டுள்ளது.
உகாண்டாவிலிருந்து எத்தியோப்பியா நாடு வழியாக விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.8.86 கோடி மதிப்புடைய 1.256 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல். போதை பொருளை 86 கேப்சூல் மாத்திரைகளாக வயிற்றுக்குள் விழுங்கி கொண்டு வந்த தாண்சானியா நாட்டை சோ்ந்த கடத்தல் ஆசாமியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அடிஸ் அபாபா நகரில் இருந்து, நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தாண்சானியா நாட்டைச்சேர்ந்த ஜோசப் பேட்டரிக் (37) என்ற பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில், உகாண்டாவில் இருந்து, இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார்.
அந்த தாண்சானியா நாட்டு பயணி ஜோசப் பேட்ரிக் மீது, சுங்கு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அந்தப் பயணியை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்சல்கள் பல விழுங்கி வந்திருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து உடனடியாக ஜோசப் பேட்ரிக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து, வயிற்றில் உள்ள கேப்சல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர். இன்று காலை வரை அந்த பணியை நடந்தது. அவருடைய வயிற்றிலிருந்து மொத்தம் 86 கேப்சல்கள் வெளியே வந்தன.
அவர் விழுங்கி வந்திருந்த கேப்சல்களை, சுங்க அதிகாரிகள் உடைத்து பார்த்தபோது, அவைகளில் போதை ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர். 86 கேப்சல்களிலும் மொத்தம் 1.256 கிலோ ஹெராயின் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 8.86 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் உகாண்டா பயனிலை கைது செய்தனர். அவரிடமிருந்த ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா். அவரை மேலும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இவரிடம் இந்த போதை பொருளை கொடுத்து அனுப்பியது யாா்?சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தாா்? என்று விசாரணை நடக்கிறது. சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்கள் என்றும் விசாரிக்கின்றனா். தாண்சான்யா நாட்டு பயணி ஒருவரிடம் இருந்து ரூ.8.86 கோடி மதிப்புடைய ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
ஜோதிடம்
இந்தியா
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion