மேலும் அறிய

என்று தணியும் இந்த இரிடியம் மோகம்...! - பண்ருட்டியில் 1.5 மோசடி செய்ததாக என்.எல்.சி ஊழியர் உட்பட 2 பேர் கைது

அலுமினிய உருளையை பார்சலில் வைத்து, இரிடியம் என்று ஏமாற்றி கொடுக்க முயன்றது தெரியவந்தது

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஷாகீர் (29). இவர் சென்னையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி புலவன் குப்பத்தை சேர்ந்த உலகநாதன் (44), நெய்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (52) ஆகியோரை ஷாகீருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, இவர்களிடம் இரிடியம் இருப்பதாகவும், இதை குறைந்த விலைக்கு வாங்கினால் கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஷாகீரிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார். 
 
இதை நம்பிய ஷாகீர் தனது உறவினர் சீனிவாசனிடமும் இதுபற்றி கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ரூ.3 லட்சத்திற்கு இரிடியத்தை விலை பேசினர். இதில் முதல் தவணையாக 1.5 லட்சத்தை ராஜன் மூலமாக உலகநாதனிடம் கொடுத்தனர். மேலும் ஆன்லைன் மூலமாக ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.14 ஆயிரமும் அனுப்பி வைத்தனர். பின்னர், புலவன்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து இரிடியத்தை பெற்றுக் கொள்ளும்படி உலகநாதன், ஷாகீருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் ஷாகீர், அவரது உறவினர் சீனிவாசனுடன் ஒரு காரில் புலவன் குப்பத்தில் உள்ள உலகநாதன் வீட்டிற்கு வந்தார். அங்கு பாலசுப்பிரமணியனும் இருந்தார்.
 
என்று தணியும் இந்த இரிடியம் மோகம்...! - பண்ருட்டியில் 1.5 மோசடி செய்ததாக என்.எல்.சி ஊழியர் உட்பட 2 பேர் கைது
 
அப்போது அவர்கள் பார்சல் போன்ற ஒரு பொருளை காண்பித்து, இதில் இரிடியம் உள்ளது. மீதி பணத்தை கொடுத்துவிட்டு பெற்று செல்லுமாறு கூறினர். இதற்கு ஷாகீர், நாங்கள் பணம் கொண்டு வரவில்லை. நீங்கள் இரிடியத்தை கொடுங்கள் நாங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார். இல்லையென்றால் ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த உலகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஷாகீர், சீனிவாசனை ஆபாசமாக திட்டி, தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் இருவரும் காயமடைந்தனர். 
 
இதுகுறித்து அவர்கள் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். அதில், ஒரு அலுமினிய உருளையை பார்சலில் வைத்து, இரிடியம் என்று ஏமாற்றி கொடுக்க முயன்றது தெரியவந்தது.  இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட உலகநாதன், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் பாலசுப்பிரமணியன் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த தாம்பரத்தை சேர்ந்த ராஜனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget