மேலும் அறிய

தலைமறைவாக இருந்த விசிக முன்னாள் நிர்வாகி... கர்நாடகாவில் ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்

கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்து முக்கிய குற்றவாளி செல்வம் தனது கூட்டாளிகளுடன் கர்நாடகாவில் கைது.

கடலூர்: ராமநத்தம் அருகே கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்து முக்கிய குற்றவாளி செல்வம் தனது கூட்டாளிகளுடன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக குற்றவாளி கைது

ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39). விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரான இவர், அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் கொட்டகை அமைத்து ரூ.500 கள்ள நோட்டு அச்சடித்தது தெரியவந்தது. கடந்த மார்ச் 30-ம் தேதி ரூ.86 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், 5 வாக்கி டாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ஏர்கன், பணம் எண்ணும் இயந்திரம், பிரின்டிங் இயந்திரம், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை நிற தாள்கள், லேப்டாப், காவலர் சீருடை, ஆர்பிஐ முத்திரை உள்ளிட்டவற்றை ராமநத்தம் போலீஸார் கைப்பற்றினர்.

கள்ள நோட்டு அச்சடித்து சொகுசு வாழ்க்கை

விசாரணையில், செல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கள்ள நோட்டு அச்சடித்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் செல்வத்துக்கு உடந்தையாக இருந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய செல்வத்தை தேடி வந்தனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் திராவிட மணி அறிவித்தார். செல்வத்தை பிடிக்க, கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர்கள் ஜம்புலிங்கம், ரவிச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கும்பலின் தலைவன் செல்வத்துக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதா ?

அவரது இருப்பிடம் குறித்து செல்போன் வாயிலாக அறிந்த தனிப்படை போலீஸார் கர்நாடகாவுக்கு சென்றனர். அங்குள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் செல்வம் தங்கியிருப்பதை உறுதிசெய்த தனிப்படையினர், அவரைச் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் வல்லரசு, ஆறுமுகம், பெரியசாமி, சூரியா, டான் என்கிற பிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்து, ராமநத்தம் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

பிடிப்பட்டவர்களிடம், கள்ள நோட்டு எவ்வளவு நாளாக அச்சடிக்கப்பட்டது, இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது, அந்த நோட்டுகள் யார் மூலம் மாற்றப்பட்டது, இந்த கும்பலின் தலைவன் செல்வத்துக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget