மேலும் அறிய

புஷ்பா பட பாணியில் கடத்தல்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் 72 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மினி லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூரில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ 30 லட்சம் மதிப்புள்ள குட்கா, மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஷ்பா பட பாணியில் சம்பவம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

டெம்போவில் ரகசிய அறை அமைத்து  குட்கா மூட்டைகள் கடத்தல்

தனிப்படை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், ரமணி மற்றும் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலைநகர் அருகே உள்ள கடவாச்சேரி பாலத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டபோது 2 டெம்போக்களில் மூட்டைகள் மாற்றப்பட்டு கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

பின்னர் அங்கு சென்று விசாரித்தபோது மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் மாற்றப்பட்டது தெரிய வந்தது. பெங்களூரில் இருந்து டெம்போவில் ரகசிய அறை அமைத்து அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி கொண்டு வந்து சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (43), தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(28), சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ்( 32), எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), பிரேம்குமார்(22) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல்

பின்னர் இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், இவர்களிடமிருந்து ரூ 30 லட்சம் மதிப்புள்ள 72 மூட்டை குட்கா பொருட்கள், 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 30 லட்சம் ஆகும். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களையும் வாகனங்களையும் நேரில் வந்து பார்வையிட்ட சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி இங்கு கொண்டு வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் குட்காவுக்கு தடை இல்லை. அதனால் அங்கிருந்து இங்கு கடத்தி வந்து சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம், வடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கிறார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்து கடந்த ஒரு மாதமாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தபோது, குட்கா கடத்தியவர்கள் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினி லாரிகளில் ரகசிய அறைகள் அமைத்து இதை கடத்தி வந்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட வேண்டி இருக்கிறது. தற்போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என டிஎஸ்பி கூறினார்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget