மேலும் அறிய
Advertisement
Cuddalore Crime News: மாமியார், மாமனாரை கொன்ற மருமகள் - 1 1/2 வருடம் கழித்து கைது - நடந்தது என்ன..?
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில், விஷம் வைத்து மாமியார் மாமனாரை கொன்ற மருமகள் கைது.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து, மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை, 1 1/2 வருடம் கழித்து, காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன்.இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, பூமாலை என்பவரின் மகள் கீதா-33 என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு பற்றி, கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரிய வர மருமகள் கீதாவை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 29.12.2021 ஆம் தேதி, தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூர் ஊருக்கு சென்று, கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார் கொளஞ்சி மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில், எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார்.
அப்போது விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு பையன் பிரபு என்பவரின் 10 வயது சிறுவன் நித்தீஸ்வரன் ஆகிய மூவருக்கும் அடுத்தடுத்து உடல் நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்து மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், விருத்தாசலம் அடுத்த மங்களம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர், விசாரணையை சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் கால ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை அடுத்து சுமார் 1 1/2 வருடம் கழித்து, சாம்பாரில் விஷம் வைத்து, மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டு பையனை கொன்ற கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனை இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion