Crime: மகளிர் குழுக்கு சொந்தமான ரூபாய் 12 லட்சத்தை மோசடி செய்த இளைஞர் - உள்ளே தள்ளிய போலீஸ்
திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூரில் மகளிர்குழுவின் காசோலையை பயண்படுத்தி 12 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![Crime: மகளிர் குழுக்கு சொந்தமான ரூபாய் 12 லட்சத்தை மோசடி செய்த இளைஞர் - உள்ளே தள்ளிய போலீஸ் Crime Youth arrested for defrauding womens group of 12 lakhs in Jamuna Marathur Crime: மகளிர் குழுக்கு சொந்தமான ரூபாய் 12 லட்சத்தை மோசடி செய்த இளைஞர் - உள்ளே தள்ளிய போலீஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/e6d87a3cfaa5fdb4e3c68d1972d14dab1678708103087109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது (45) இவர் விவசாயி அவரது மனைவி சாந்தி வயது (40). இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் குழுக்கள் இதில் செயல்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ஜமுனாமரத்தூரில் உள்ள ஜம்படி கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் வயது (32) என்பவர் கள அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த கூட்டமைப்பிற்கான சேமிப்பு கணக்கு ஜமுனாமரத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருக்கிறது. இந்த வங்கி கணக்கில் இருந்து குழுக்களுக்கு கடண் உதவி செய்ய பணம் எடுக்க வேண்டும் என்றால் தலைவியான சாந்தி, பொருளாளரான தீபா, முதன்மை நிர்வாகியான அருள்பத்திநாதன் ஆகியோர் குழு கூட்டமைப்பால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் சென்று பணத்தை பெற்று வருவார்கள்.
பணம் ஒப்படைக்கவில்லை:
இந்நிலையில் கூட்டமைப்பில் உள்ள 12 மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று இணைந்து விவசாய பொருட்களை வாங்குவது சம்பந்தமாக கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குரிய பணத்திற்கு காசோலையில் அவர்கள் 3 நபர்களும் கையெழுத்திட்டு அந்த காசோலையை கள அலுவலர் பிரவீன்குமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் பிரவீன்குமார் கூட்டமைப்பின் வங்கி காசோலையில் தலைவி உள்ளிட்ட நிர்வாகிகளின் கையெழுத்தை போட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பிரவீன் குமார் ரூபாய் 12 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
ஆனால் அந்த பணத்தை பிரவீன் குமார் குழுவினர்களிடம் எடுத்து சென்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிரவீன் குமார் பணத்தை எடுத்துக்கொண்டு வருவார் என நம்பி இருந்த அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இது குறித்து தலைவி சாந்தி பிரவீன் குமாரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பிரவீன் குமார் அவரிடம் பணம் நான் எடுக்கவில்லை என கூறியுள்ளார். அதனையடுத்து பிரவீன் குமார் பணத்தை எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
12 லட்சம் மோசடி:
உடனடியாக இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவி சாந்தி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி மேற்கொண்டனர். போலியாக காசோலையில் கையெழுத்திட்டு ரூபாய் 12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரவீன்குமாரை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)