Crime : வெளியூரில் வேலை: அனுமதிக்காத மாமியார் - ஆத்திரத்தில் 10 துண்டாக வெட்டிய மருமகன்!
ராஜஸ்தானில் மாமியாரை 10 துண்டுகளாக, மருமகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் வித்யாதர்நகர் பகுதியில் உள்ள லால்பூரியா அடுக்குமாடி குடியிருப்பில் டிசம்பர் 11-ஆம் தேதி அன்று அனுஜ் என்பவர், தனது மாமியாரான சரோஜ் ஷர்மாவை (64) சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் குளியலறையில் ரம்பம் மூலம் மாமியாரின் உடலை 10 துண்டுகளாக வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Rajasthan | On Dec 11, one Anuj from Jaipur reported that his aunt is missing, we found various contradictions in his statements. During probe, we found that he killed his aunt using a hammer & cut her body into pieces using a knife & marble cutter: Paris Deshmukh, DCP North pic.twitter.com/ytGtKhSbsf
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 17, 2022
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ” சரோஜ் ஷர்மாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் வீட்டின் பொறுப்பை அனுஜ் கவனித்து கொண்டு வந்தார். சரோஜ் ஷர்மாவுக்கு வெளிநாட்டில் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதற்கிடையே அனுஜ்க்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்தது. சண்டையால் சில நாட்கள் அனுஜ் வீட்டிற்கு வராமலும் இருந்துள்ளார்” என்றார்.
வெளியூருக்கு செல்ல மறுத்ததால் ஆத்திரம்
"பொறியியல் படித்துள்ள அனுஜ-க்கு டெல்லியில் வேலை கிடைத்துள்ளது. இதனால் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கு அவரது மாமியாரான சரோஜ் ஷர்மா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கு சண்டை ஏற்பட்டது. கடும் கோபம் அடைந்த அனுஷ் தனது மாமியாரை சுத்தியலால் தலையில் பயங்கரமாக அடித்துள்ளார்” என்று கூறப்படுகிறது.
"பின்பு, இந்த கொலையை மறைக்க உடலை துண்டாக துண்டாக வெட்ட திட்டமிட்டுள்ளார். இதனால் வீட்டில் உள்ள குளியறையில் அவரது உடலை வைத்துவிட்டு கடைக்கு சென்று ஆயுதங்கள் வாங்கி உள்ளார். பின்பு, சரோஜ் ஷர்மா உடலை 10 துண்டுகளாக வெட்டியுள்ளார். அதனை, ஒரு பிளாஸ்டிக் கவர் மற்றும் வாளியில் கொண்டு சென்று ஜெய்பூரில் உள்ள காட்டு பகுதியில் வீசியுள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அன்றைய நாள் இரவே, தனது மாமியார் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். இதுகுறித்து போலீசார் அனுஜிடம் விசாரணைக்கு வந்தபோது அவரது வீட்டின் சமயலறையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்துள்ளனர். பின்பு விசாரணை செய்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, போலீசார் அனுஜ் மற்றும் அவரது மனைவி பூஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் படிக்க