மேலும் அறிய

Crime: கொடூரத்தின் உச்சம்: 8 முறை டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட நபர் - சகோதரர் வெறிச்செயல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீறி டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீது டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

பகீர் வீடியோ:

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிலம் தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், இரு குடும்பங்களும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருந்தனர்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு  நீதிமன்றம் வரை பிரச்னை சென்றது. இந்நிலையில்,  தான் நேற்று இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. 

இந்த பிரச்சினையில் நிர்பத் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், 5 பேருக்கும் மேற்பட்டார் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகராறு நீடித்த நிலையில், அது கைகலப்பாக மாறியது.

இதில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இருக்கும்போது, நிர்பத் என்பவர் கீழே விழுந்தார். அப்போது, இவரது சகோதரர் தாமோதர் அருகில் இருந்த டிராக்டரில் ஏறி அதனை ஓட்டி இருக்கிறார். அதுவும், நிர்பத் மீது 8 முறை ஏற்றி இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோதும், தாமோதர் டிராக்டரை நிறுத்தாமல், நிர்பத் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே  இருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே நிர்பத் பரிதாபமாக உயிரிழந்தார். 

என்ன காரணம்?

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர் சிங். அதே பகுதியைச் சேர்ந்தவர் அதர் சிங். இந்த இரண்டு குடும்பங்களுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை பகதூர் சிங்கின் குடும்பத்தினர்  அந்த நிலத்தில் டிராக்டரில் வந்திருக்கின்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அதர் சிங்கின் குடும்பத்தினரும் அங்கு வந்தடைந்தனர்.

அப்போது, இரண்டு குடும்பங்களுக்கு நிலம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தை சிறிது நேரத்திற்கு சண்டையாக மாறியது. அப்போது, இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தான், அதர் சிங்கின் மகன் நிர்பத் தரையில் விழுந்திருக்கிறார். அப்போது, அவரது சகோதரர் தாமோதர் டிராக்டரை அவர் மீது 8 முறை ஏற்றி கொலை செய்திருக்கிறார்.

மேலும், இந்த தகராறில் 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸை, எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர். 


மேலும் படிக்க

Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget