Crime: சின்னமனூர் அருகே இளைஞரை குத்திக்கொன்ற வழக்கில் 6 பேர் கைது
செல்போனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் வினோத்குமாரை குத்தி கொலை செய்ததாக கூறியிருந்தனர்.
![Crime: சின்னமனூர் அருகே இளைஞரை குத்திக்கொன்ற வழக்கில் 6 பேர் கைது crime: Police arrested 6 people in the case of stabbing a teenager near Chinnamanur TNN Crime: சின்னமனூர் அருகே இளைஞரை குத்திக்கொன்ற வழக்கில் 6 பேர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/16/386507b92fb8735e80e5d5010eb793cc1689512784852739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (25). இவர், தனது நண்பரான சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்த யுவராஜா என்பவரின் செல்போனை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி சென்றுள்ளார். இதையடுத்து யுவராஜா செல்போனை திருப்பி தருமாறு ஒண்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு செல்போனை திருப்பி கேட்டது தொடர்பாக ஒண்டி தரப்பினருக்கும், யுவராஜா, அவரது நண்பர் வினோத்குமார் (24) இடையே தகராறு ஏற்பட்டது.
TN Govt Reward: விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அப்போது ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத் குமாரை குத்தினார். இதில் வினோத்குமாா் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் வினோத் குமாரை கொலை செய்த ஒண்டி, கார்த்திக், அஜய், செல்வேந்திரன், மாதவன் மற்றும் செல்வா ஆகிய 6 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
150 மோமோஸ்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் சவால்... சோகத்தில் முடிந்த சேலஞ்... என்ன நடந்தது?
பின்னர் அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜை தாக்கிவிட்டு அவரது செல்போனை ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் பிடுங்கி சென்றனர். இதையடுத்து செல்போனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் வினோத்குமாரை குத்தி கொலை செய்ததாக கூறியிருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)