Crime: பரோட்டாவுக்கு பாயா எங்கடா...? ரகளையில் ஈடுபட்ட போலீஸ்கார்கள் - சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Crime : பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உணவு பிரியர்களில் அதிக நபர்களுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவாக அமைந்துள்ளது. அதற்கு சமமாக அல்லது அடுத்தப்படியாக அனைவருக்கும் பிடித்த உணவாக அமைந்துள்ளது பரோட்டா தான். பரோட்டா சால்னா என்றவுடன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு அடுத்து கேரளாவில் பிரபலம். பரோட்டா சால்னா காம்பினேஷன் சும்மா நம்மை கட்டி இழுக்கும் வகையில் அமைந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் சும்மாவே பரோட்டா என்றால் நம்முடைய இளைஞர்கள் ஓடி சென்று சாப்பிடுவார்கள். இந்த பரோட்டோ சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு பல பிரச்சனைகளும் இதனால் ஏற்பட்டுள்ளது.
பாயா கேட்டு ரகளை
இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 5 பேர் இரவு நேரத்தில் பணி முடிந்ததும் அருகில் இருக்கு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது பரோட்டாவை ஆர்டர் செய்த இவர்கள், அதனுடன் பாயாவையும் கேட்டுள்ளனர். அதன்பிறகு பாயா கேட்டு ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை கண்டித்த ஹோட்டல் ஊழியர்களை காவலர்கள் 2 பேர் மிரட்டியதோடு, அங்கு வரும் வாடிக்கையாளர்களை சாப்பிட விடாமல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், காவலர்கள் 5 பேர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையில் ஹோட்டலில் காவலர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பரவியது. மேலும் இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சஸ்பெண்ட்:
அப்போது, காவலர்கள் 2 பேர் ரகளையில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து, காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவலானதை அடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க