Crime: எச்ஐவி பாதித்த பெண்ணால் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை...!
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயாருக்கு தெரியவந்தது. அதன் பிறகு சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.
உத்தரகாண்டின் டேராடூனில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு எச்ஐவி நோயால் இறந்துவிட்டார். இதன்பின்னர் அவர் உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். கணவருக்கு இருந்த எச்ஐவி நோயை மறைத்து தனக்கு திருமணம் செய்த விரக்தியில் இருந்த அப்பெண், கணவரின் குடும்பத்தாரை பழிவாங்க நினைத்துள்ளார்.
இந்த நிலையில், அவரது கணவரின் மூத்த சகோதரரின் 15 வயது மகன், கடந்த மாதம் ஹோலி பண்டிகையையொட்டி அப்பெண்ணின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயாருக்கு தெரியவந்தது. அதன் பிறகு சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு நோயையும் பரப்பும் அபாயகரமான செயல் மற்றும் மோசமான பாலியல் வன்கொடுமை என்ற பெண்ணுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை இந்தியா பதிவு செய்வதாக குழந்தை துஷ்பிரயோக உதவி மையமான சைல்டுலைன் கூறுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. இவற்றில், உ.பி.யில் அதிகபட்சமாக 6,898 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ள 6,898 வழக்குகளில் 2,630 வழக்குகள் இயற்கைக்கு மாறான உடலுறவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்று தரவு வெளிப்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த வழக்குகளில், சுமார் 3,897 பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுடன் மோசமான பாலியல் வன்கொடுமை தொடர்பானவை, இதில் 3,881 சிறுமிகள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்