மேலும் அறிய

Crime: விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பணியாளர்.. கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்..ஷாக்!

மும்பையில் வீட்டில் தனியாக இருந்த விமான பணிப்பெண் வேலை செய்யும் இளம்பெண்ணை, பணியாளர் கழுத்தை அறுத்து கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மும்பையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை, பணியாளர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்:

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபால் ஆக்ரே (25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் விமான பணிப்பெண்ணாக பயிற்சி பெற மும்பைக்கு வந்திருந்தார். அங்கு அந்தேரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் ரூபால் ஆக்ரே மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 3) இளம்பெண் ரூபால் ஆக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் கிடந்துள்ளார். 

அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தபோது பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகத்தில் இளம்பெண்ணின் நண்பர்களுக்கு  தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கூறினர். இதனை அடுத்து, அவரது நண்பர்கள் அந்தேரி நகரில் இருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

விசாரணையில் அம்பலம்:

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  வீடு இருக்கும் வளாக பகுதியில் தூய்மை பணியாளராக இருந்த விக்ரம் அத்வால் (40) என்பவரை கைது செய்தனர். அவரிடனும், அவரது மனைவியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த  நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, "தூய்மை பணியாளர் விக்ரம் அத்வால் காலை 11 மணியளவில் ரூபேல்லின் வீட்டிற்கு குப்பை எடுப்பதற்காக சென்றிருக்கிறார். வீட்டில் ரூபேல் மட்டும் தனியாக இருப்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டு உள்ளே பாத்ரூம் பைப்பில் கசிவு இருப்பதாகக் கூறி அதைப் பார்க்கும்படி கூறியிருக்கிறார்” 

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி:

இதனால், ரூபேல் பாத்ரூம்மிற்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து விக்ரம் அத்வாலும் சென்றிருக்கிறார். பாத்ரூம்குள், ரூபோல் சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார் விக்ரம் அத்வால். ஆனால், அதனை தடுக்க ரூபேல் முயற்சித்திருக்கிறார். இதனை அடுத்து, ரூபேல் விக்ரமுடன் போராடியபோது விக்ரமின் முகம் மற்றும் தலையில் அவர் தாக்கியுள்ளார். அப்போது, விக்ரம் ரூபேலின் தலைமுடியை பின்புறமாக இழுத்து, கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார் விக்ரம் அகர்வால். பின்பு அவரது முகத்தில் இருந்த காயம், சட்டையில் இருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் மனைவி முகத்தில் இருக்கும் காயம் பற்றி கேட்டதற்கு கீழே விழுந்துவிட்டதாக விக்ரம் தெரிவித்திருக்கிறார்” என்று போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, கைதான விக்ரம் அகர்வாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செப்டம்பர் 8ஆம் வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget