Crime : 'ஏன் வழுக்கை தலையை மறைச்சீங்க...?' கேள்வி கேட்ட மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர்..
சென்னை தாம்பரத்தில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
Crime : சென்னை தாம்பரத்தில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவி கொலை
சென்னை தாம்பரம் அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (32). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், லோகப்பிரியா கடந்த 27ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லோகப்பிரியாவின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது பற்றி அவரது கணவர் உட்பட குடும்பத்தினரிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் அம்பலம்
இதுபற்றி போலீசார் கூறுகையில், ”கண்ணனுக்கு திருமணம் செய்ய அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். அப்போது கண்ணன் வழுக்கை தலையுடன் இருப்பதால் அவருக்கு பெண் கொடுக்க சிலர் முன்வரவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த கண்ணன் விக் வைத்து வழுக்கை தலையை மறைத்து, லோகப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கண்ணனுக்கு திருமணம் முடிந்து சில தினங்களுக்கு பிறகு லோகப்பிரியா, கணவரின் முடிக்கு எண்ணெய் வைக்க முயன்றபோது அவர் மறுத்திருக்கிறார். இதுபற்றி லோகப்பிரியா கேட்டதற்கு சரியாக பதிலளிக்காமல் கோபத்துடன் இருந்தார். பின்னர், ஒரு நாள் லோகப்பிரியாவுக்கு உண்மை தெரியவந்தது.
நாடகமாடிய கணவர்
அப்போது, மனமுடைந்த லோகப்பிரியா, 'ஏன் உண்மையை மறைத்துவிட்டீர்கள்?' என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கு இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், மனைவி லோகப்பிரியாவை கொலை செய்துள்ளார்.
உடனே கண்ணன் இதுபற்றி தன்னுடைய அம்மாவிடம் கூறினார். இதனை அடுத்து இருவரும் கொலையை மறைக்க லோகப்பிரியா தற்கொலை செய்து கொண்டது போல் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதற்கிடையில் லோகப்பிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரியை கைத செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஏன் வழுக்கை தலையை மறைத்தீர்கள் என கேள்வி கேட்ட புதுமனைவியை, கணவர் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime : கொசு விரட்டியால் வந்த வினை...ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம்...!
திருமணமான 3 நாளில் புது மணப்பெண் தற்கொலை.. கரூர் அருகே சோகம்